Search This Blog

Saturday, December 31, 2011

புத்தாண்டு 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ஆனால் இந்த முறை விவசாயிகளுக்கு வழி பிறக்காது போலிருக்கிறது ஏனென்றால் வழியை "தானே" புயல் மூடிவிட்டது.

பொதுவாக தை மாதத்தில் தான் விளைந்த பயிர்களை அறுவடை செய்யப்படும் ஆனால் இந்த முறை அறுவடை செய்ய முடியாது டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது.

புயல் மழையால் 48,000 ஹெக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது என்ற செய்தியை படிக்கும் போது இந்த புத்தாண்டு மகிழ்ச்சியா விவசாயிகளுக்கு பிறக்கவில்லை என்பது மட்டும் உண்மை. இந்த அரசாங்கம் மனது வைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரம் வழங்கினால் அவர்களுக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறக்கும். விவசாயிகளின் மகிழ்ச்சி அரசாங்கத்தின் கையில்.

இந்த மாதிரி இயற்கை பேரிடர்ல இருந்து விவசாயிகளை காக்க அரசாங்கம் எதாவது காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தா நல்ல இருக்கும்.


இந்த 2011ம் வருடம் சிலருக்கு மகிழ்ச்சியா, சிலருக்கு வருத்தமா இருந்து இருக்கும். ஒவ்வொருத்தர் மகிழ்ச்சியும் துன்பமும் அவங்க அவங்க கைலதான் இருக்குது ஆனா தமிழர்களுக்கு,விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு  இந்த 2011 வருடம் ஒரு சோதனையான வருடம் தான். 



இந்த புகை படத்தை பார்க்கும் போது 2011ம் ஆண்டு முடிந்து 2012ம் தொடங்குவதை குறிப்பது போல் இருந்தாலும் மற்றுமோர் விசயத்தையும் சொல்லுவது போல் உள்ளது அது ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசுழல் பாதிக்கபட்டு கடல் நீர் மட்டம் உயருவதை குறிப்பது போல் உள்ளது.

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், செய்துவிட்டார்கள் என்று கவலை படாமல், மற்றவர்களை குறை கூறாமல் சுற்று சுழலை பாதுகாப்பதற்கு எதாவது செய்ய வேண்டும், சிறு முயற்சியாவது செய்ய வேண்டும்.

ஆபீஸ்ல ஒரு வாரம் shutdown நான் என்ன பண்ண போறேன்னு யோசிச்சுட்டு இருந்தேன் போன சனிக்கிழமை. ஒரு வாரம் போனதே தெரியல ஆனா உருப்பிடிய ஒன்னும் பண்ணல ஒவ்வொரு நிமிசமும் மின்னலை வீட வேகமா போகுது.

இப்போது தான் 2011 புத்தாண்டு கொண்டாடியது போல் இருக்கிறது ஆனால் இப்போது 2012 புத்தாண்டு வந்து விட்டது.

இந்த வருடம் மிக மிக விரைவாக சென்று விட்டது. ஒவ்வொரு ஆண்டும் செல்ல செல்ல தனிப்பட்ட முறையிலும், சமுக அளவிலும் நமக்கு பொறுப்புகளும், கடமைகளும் கூடிகொண்டே இருக்கிறது. அதை நாம் உணரவேண்டும். ஏன்னெனில் காலம் மிக விரைவாக ஓடிக்கொண்டு இருக்கின்றது ...

இந்த 2012 ஆண்டும் அணைத்து தரப்பு மக்களுக்கும் இனிமையான ஆண்டாக அமைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்புடன் 
ராஜா 

No comments:

Post a Comment