Search This Blog

Wednesday, December 7, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)



முல்லை பெரியாறு பிரச்சனைகாக தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் சரமாரி தாக்குதல் ஆனா நாம அமைதியா இருக்கோம். நம்மா வேலைய நாம பாத்துட்டு இருக்கோம். இது ஏன் தெரியல மொதல மலேசிய, சிங்கப்பூர் அப்புறம் இலங்கை ஆரம்பிச்சு அப்படியே மகாராஷ்டிரா, கர்நாடக,கேரளா வழியா வந்து இப்போ தமிழ் நாட்லேயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.


 இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் இப்படியே அடி வாங்க போறாங்களோ தெரியல எதுக்கும் ஒரு முடிவு வேனும் அதனால இப்படி அடி வாங்கறதுக்கும் ஒரு முடிவு கட்டணும். 


இத்தனைக்கும் மலையாளிகள் சாப்பாட்டுல இருந்து எல்லாத்துக்கும் நம்மல தான் எதிர் பார்த்துட்டு இருக்கனுங்க அப்பவே நம்மல அடிக்கறாங்க. 


தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இப்படியே போச்சுனா அப்பறம் டைம் பாஸுக்கு எல்லாம் அடிப்பாங்க அப்படி அடிக்கும்போது அடி வாங்கறவங்க நாமளா கூட இருக்கலாம் ஜாக்கிரதை!!! அதனால யாருக்கோ பிரச்சனைனு சும்மா இருக்காதிங்க உங்கள முடிஞ்சது செய்யுங்க தமிழர்களுகா,உங்களுகா, நமக்காக.

நல்ல கேள்வி:  நில நடுக்கம் உள்ள பகுதியில் புதிய அணை கட்டினால் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா?- தா.பாண்டியன்..


இன்றைய ரவுசு: தமிழகத்தில் கேரள மாநிலத்தவரின் கடைகள் உடைப்பு,நாடாளுமன்றம் முன்பு திருமாவளவன் உண்ணாவிரதம்,
எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் - கேரளாவுக்கு சீமான் எச்சரிக்கை ,
தமிழகத்தில் டிச.15-ல் சினிமா காட்சிகள் ரத்து


இந்த வார டீல்: ஆண்டு தள்ளுபடி விற்பனையாக ஆரியாவுக்கு ரூ.2 லட்சம் என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது யாராவது டாட்டா கார் வாங்கணும் ஐடியா வச்சு இருக்கறவங்க use  பண்ணிகோங்க. 




வேலை வாய்ப்பு பற்றி : 
InfoSys recruits fresher for details click and view the below given image




Song of the Week:  




Jokes: 
Wife: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" 
Husband: "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."


தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!!!!


உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

7 comments:

  1. தங்களது வேட் வெரிபிக்கேசனை எடுத்தால் கருத்திட இலகுவாய் இருக்கும் சகோ...

    ReplyDelete
  2. ராஜா, முல்லைப் பெரியாறு பிரச்சனை எத்தன வில்லங்கமான மேட்டரு, அதைப் போயி பட்டும் படாம பேசிப்புட்டீங்களே, இங்க பாரு, எப்புடி பாகிஸ்தான் அரசியல்வாதிகளுக்கும் இந்திய அரசியல்வாதிகளுக்கும் காஷ்மீர் ஒரு பிழைப்புக்கான மேட்டரோ, அதே மாதிரித்தான் கேரள அரசியல்வாதிகளுக்கும் சரி, தமிழ்நாட்டு மாண்புமிகுக்களுக்கும் சரி, முல்லைப்பெரியாறு ஒரு பிழைப்புக்கான மேட்டரு. இதை வெச்சு இன்னும் பல காலத்துக்கு அரசியல் பண்ணலாம்.

    ReplyDelete
  3. நல்ல தொடக்கம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. நண்பர் தராசுக்கு நான் இங்கே குறிப்பட்டது தமிழர்கள் தொடர்ந்து தாக்க படுவதை பற்றி முல்லை பெரியாறு பிரச்சனையை பற்றி அல்ல. தமிழர்கள் தொடர்ந்து தாக்க படுவதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பது தான் என் விருப்பம் முல்லை பெரியாறு பிரச்சனையை பற்றி தனியாக ஒரு பதிவு போட முயற்சிக்கிறேன்,நன்றி.

    ReplyDelete
  5. << இத்தனைக்கும் மலையாளிகள் சாப்பாட்டுல இருந்து எல்லாத்துக்கும் நம்மல தான் எதிர் பார்த்துட்டு இருக்கனுங்க அப்பவே நம்மல அடிக்கறாங்க. >> தமிழ்நாட்டுக்காரங்க ஓசிச் சோறு போடற மாதிரி பேசறோம். நாம கொடுக்கலன்னா கர்நாடகாக்காரன் தருவான். மளிகைக்காரன் கடையை மூடிட்டா ஊர்க்காரங்க பட்டினியா இருக்கப் போறாங்க. பிரச்னைக்கு சம்பந்தப்பட்டத மட்டும் பேசுங்க. தேவையில்லாம வணிகம் பாதிக்கப்ப்படாமலும், பிரச்னையின் அளவைக் கூட்டாமல் பேச வேண்டும். நமக்குத் தண்ணியும் வேண்டும். அவங்க வியாபாரமும் வேண்டும்.

    ReplyDelete
  6. தமிழ் பையா, கர்நாடகாக்காரன் தரட்டும் உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா கேரளகாரனுக்கு நாம அவனுடைய உணவு தேவையில் 48% நாம தருகின்றோம் அதுவும் இல்லாம மணல் இங்க இருந்து தான் போகுது நமக்கு தர தண்ணிக்கு வருசா வருஷம் காசு தரோம் அவுனுங்க சும்மா தண்ணி தரல காசும் வாங்கிட்டு நம்மகிட்ட பிரச்சன்னையும் தராங்க. நமக்கு வர லாபத்தை விட நஷ்டம் தான் ஜாஸ்தி இப்ப அவுனுங்க தண்ணி புதுசா அணை கட்டனும் சொல்லுறது காரணம் தண்ணி தரகூடாதுன்னு இல்ல தண்ணிக்கு இன்னும் காசு அதிகமா வாங்கலமுனு தான் அதை பத்தி தெரிஞ்சுக்க முல்லை பெரியாறு ஒப்பந்ததை பத்தி முதலா தெரிஞ்சிகோங்க ... இதுவரைக்கும் 28 கோடியே 8 லட்சம் நாம கட்டி இருக்கோம்.அது போதலைன்னு புதுசா அன்னை கட்டி புதுசா ஒப்பந்தம் போட்டு காசு வாங்கலமுனு பாக்குறான். கேரளகாரனுடைய உணவு தேவையா கர்நாடக மகராஷ்டிரா கூட முழுமையா பூர்த்தி பண்ணாது எப்படியா இருந்தாலும் நம்ம கிட்ட தான் வரணும்.. பிரச்னையின் அளவை பெருசு பண்ணதான் ஒரு முடிவுக்கு வரும்

    ReplyDelete