Search This Blog

Wednesday, December 7, 2011

முதல் படி.. முதல் அடி...


நீண்ட நாட்களாக ஓர் வலைபதிவு தொடங்க வேண்டும் என்று ஆவல் அது இன்று தான் நிறைவேறியது. வலையுலகில் ஏகப்பட்ட வலைபதிவுகள் அதில் நான் என்ன புதிதாக செய்து விடபோகிறேன் என்றும் ஓர் எண்ணம் இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்போம் எனது கருத்துகளையும், ரசனைகளையும் ரசிப்பதற்கு யாராவது இருப்பார்கள் என்ற நம்பிகையில் தொடங்கிவிட்டேன்.


சிறிய வயதில் அடிக்கடி பள்ளி விட்டு பள்ளி மாற்றி பயில வேண்டிய சுழலில் வளர்ந்தேன் ஏன் என்றால் என் தந்தை காவல் துறை இலாகவில் ஓர்  அதிகாரி ஆதலால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படுவதுண்டு அப்போதெல்லாம் புதிய பள்ளிகளுக்கு செல்லும் பொது ஓர் அச்சஉணர்வு ஏற்படும் அது இந்த பள்ளியில் படிப்பவர்கள் நம்மை நண்பர்களாக,சகமாணவனாக ஏற்று கொண்டு நம்மை ஆதரிப்பார்களா என்று எல்லாம் பள்ளியில் சேரும்போது தோன்றும் ஆனால், அந்த எண்ணங்களை பள்ளியில் கிடைக்கும் புது நண்பர்கள் தவிடு பொடியாக்கி விடுவார்கள் என்னை நண்பனாக ஏற்று கொண்டு. 


சில நண்பர்கள் நமக்கு வித்தியாசமாக கிடைப்பார்கள் அது எப்படி என்றால் நான் ஏழாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு சென்னையில் படிக்கும் சுழல் ஏற்பட்டது அதனால் இங்கு பூவிருந்தவல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தேன்.


முதல் நாள் பள்ளிக்கு சென்ற நான் நாசர் என்ற மாணவனை சந்தித்தேன் அப்போது அவன் கடந்த பள்ளியில் எத்தனாம் ரேங்க் எடுப்பாய் என்று கேட்டான் நான் இரண்டாம் ரேங்க் எடுப்பேன் என்று சொன்னேன் அதற்கு அவன் இங்கே எல்லாம் உன்னால் நன்காம் ரேங்க் கூட எடுக்க முடியாது என்று இளக்காரமாக கூறினான் நான் அதையே ஓர் சவாலாக எடுத்து கொண்டு முதலில் நான்கு, அப்புறம் இரண்டு என எடுத்து ஒரு வழியாக அரையாண்டு தேர்வில் முதல் ரேங்க் எடுத்தேன். எங்களிடையே ஏற்பட்டஇந்த  போட்டி நல்ல நண்பர்களாக ஆக்கியது.




அது போல தான் இப்போது இந்த பதிவுலகில் முதல் அடி எடுத்து வைத்துள்ளேன் என்னை எப்படி ஏற்று கொள்வார்கள் ஓர் நண்பனாக, சகோதரனாக அல்லது ஓர் குடும்ப உறுப்பினராக ஏற்று கொள்வார்களா என்ற சிந்தனையில் இன்று எனது முதல் பதிவை பதிவு செய்கிறேன் இருந்தாலும் என்னுள் ஓர் நம்பிகை இந்த பதிவுலகம் ஏற்று கொள்ளும் எனது முயற்சிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் தரும் என்றும், எனது தோழன் நாசர் போன்று பல தோழர்களையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

--
என்றும் அன்புடன் 
ரா.ராஜா 

1 comment:

  1. வாங்க.. கடை நல்லபடி கல்லா கட்ட வாழ்த்துகள்

    ReplyDelete