Search This Blog

Saturday, December 31, 2011

புத்தாண்டு 2012

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள் ஆனால் இந்த முறை விவசாயிகளுக்கு வழி பிறக்காது போலிருக்கிறது ஏனென்றால் வழியை "தானே" புயல் மூடிவிட்டது.

பொதுவாக தை மாதத்தில் தான் விளைந்த பயிர்களை அறுவடை செய்யப்படும் ஆனால் இந்த முறை அறுவடை செய்ய முடியாது டெல்டா மாவட்டங்களில் பயிர்கள் நீரில் முழ்கியுள்ளது.

புயல் மழையால் 48,000 ஹெக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது என்ற செய்தியை படிக்கும் போது இந்த புத்தாண்டு மகிழ்ச்சியா விவசாயிகளுக்கு பிறக்கவில்லை என்பது மட்டும் உண்மை. இந்த அரசாங்கம் மனது வைத்து விவசாயிகளுக்கு உரிய நிவாரம் வழங்கினால் அவர்களுக்கும் இந்த புத்தாண்டு மகிழ்ச்சியாக பிறக்கும். விவசாயிகளின் மகிழ்ச்சி அரசாங்கத்தின் கையில்.

இந்த மாதிரி இயற்கை பேரிடர்ல இருந்து விவசாயிகளை காக்க அரசாங்கம் எதாவது காப்பீட்டு திட்டம் கொண்டு வந்தா நல்ல இருக்கும்.


இந்த 2011ம் வருடம் சிலருக்கு மகிழ்ச்சியா, சிலருக்கு வருத்தமா இருந்து இருக்கும். ஒவ்வொருத்தர் மகிழ்ச்சியும் துன்பமும் அவங்க அவங்க கைலதான் இருக்குது ஆனா தமிழர்களுக்கு,விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு  இந்த 2011 வருடம் ஒரு சோதனையான வருடம் தான். 



இந்த புகை படத்தை பார்க்கும் போது 2011ம் ஆண்டு முடிந்து 2012ம் தொடங்குவதை குறிப்பது போல் இருந்தாலும் மற்றுமோர் விசயத்தையும் சொல்லுவது போல் உள்ளது அது ஒவ்வொரு ஆண்டும் சுற்றுசுழல் பாதிக்கபட்டு கடல் நீர் மட்டம் உயருவதை குறிப்பது போல் உள்ளது.

மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், செய்துவிட்டார்கள் என்று கவலை படாமல், மற்றவர்களை குறை கூறாமல் சுற்று சுழலை பாதுகாப்பதற்கு எதாவது செய்ய வேண்டும், சிறு முயற்சியாவது செய்ய வேண்டும்.

ஆபீஸ்ல ஒரு வாரம் shutdown நான் என்ன பண்ண போறேன்னு யோசிச்சுட்டு இருந்தேன் போன சனிக்கிழமை. ஒரு வாரம் போனதே தெரியல ஆனா உருப்பிடிய ஒன்னும் பண்ணல ஒவ்வொரு நிமிசமும் மின்னலை வீட வேகமா போகுது.

இப்போது தான் 2011 புத்தாண்டு கொண்டாடியது போல் இருக்கிறது ஆனால் இப்போது 2012 புத்தாண்டு வந்து விட்டது.

இந்த வருடம் மிக மிக விரைவாக சென்று விட்டது. ஒவ்வொரு ஆண்டும் செல்ல செல்ல தனிப்பட்ட முறையிலும், சமுக அளவிலும் நமக்கு பொறுப்புகளும், கடமைகளும் கூடிகொண்டே இருக்கிறது. அதை நாம் உணரவேண்டும். ஏன்னெனில் காலம் மிக விரைவாக ஓடிக்கொண்டு இருக்கின்றது ...

இந்த 2012 ஆண்டும் அணைத்து தரப்பு மக்களுக்கும் இனிமையான ஆண்டாக அமைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.



அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.


அன்புடன் 
ராஜா 

Friday, December 30, 2011

கூடங்குளம்

கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி சமுக ஆர்வலர் அ. முத்துகிருஷ்ணன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரை





Wednesday, December 28, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)


கடந்த வாரம் நமது பாரத பிரதமர் திரு மண்மோகன் சிங் தமிழகத்திற்கு விஜயம் செய்தார். அவர் தமிழகத்திற்கு வந்த நேரம் கூடங்குளம் மற்றும் முல்லை பெரியாறு பிரச்சனைகளால் தமிழகம் கொதித்து கொண்டிருகிறது அனால் அதை பற்றி அவர் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை வந்தார் விழாவில் கலந்தார் சென்றார்.

இவர் இந்தியாவின் பிரதமராக வந்தது உண்மையில் இந்தியாவின் கஷ்ட காலம் தான் ஒரு பிரச்சனை சந்திக்க துணிவற்ற அந்த பிரச்னை தீர்ப்பதற்கு திறனற்ற இவர் எதற்காக அந்த பதவியில் இருக்கிறார் என்றும் தெரியவில்லை.

இந்திய பிரதமருக்கு எதிராக நமது புரட்சி கலைஞர் கருப்பு கொடி காட்ட போவதாக அறிவித்தார் அனால் பேச்சில் இருந்த வேகம் செயலில் இல்லை மிகவும் வருதற்குரியது.

சென்னையில் கிறிஸ்மஸ் தினத்தன்று முல்லை பெரியாறு அனை பிரச்சனைக்காக பல்லாயிறுகணக்கான  மக்கள் திரண்டது மிகவும் பெருமையாக இருந்தது.


எனக்கு தெரிந்து தமிழர் பிரச்னையில் கவிஞர் தாமரை மிகவும் தெளிவாக பேசுகிறார் சீமானை விட.

கவிஞர் தாமரையின் பேசுக்கள் சில  :

"உச்ச நீதிமன்ற தீர்ப்பை கேரளா, கர்நாடகா மதிப்பதில்லை. தமிழ்நாட்டில் இறையாண்மைக்கு குரல் கொடுக்கிறார்கள்."

"புதிய அணையை கட்டுவோம் எனும் கேரளா, அணையில் தமிழகத்துக்கு எந்த உரிமையும் கிடையாது என உறுதிபாடு கொண்டுள்ளது. "

"மன்னராட்சி காலத்தில் இந்த மாதிரி தண்ணீர் பிரச்னை வந்தது கிடையாது. பிரிட்டிஷ் ஆட்சியிலும் நமக்கு பிரச்னை வந்ததில்லை. "

"மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, இந்தியா ஆன பிறகு, பிரச்னை எழுந்து, அதை தீர்க்கவில்லை. மத்திய அரசு ஏமாற்றுகிறது. "

"இந்தக் கூட்டம் சாதி மதம் தாண்டிய கூட்டம். ஆனால், இனம் மொழி தாண்டிய கூட்டம் அல்ல."

"தமிழ்நாடு தனி நாடாக இருக்க வேண்டும். இந்தியா, இந்தியா என்று சொல்லி என்னத்த சாதிச்சோம்."

"தேனியின் தன்னெழுச்சி போல் தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியால் எழ வேண்டும்."

 
சென்னை அருகே பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் பெண்கள், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இவர்களில் 21 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பலியானவர்களில் படகை ஓட்டி வந்த அன்சாரி என்பவரின் மனைவியுடம் அடங்குவார். அதிர்ஷ்டவசமாக, இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிர் தப்பினார்கள். படகை ஓட்டிச் சென்ற அன்சாரியும் உயிர் தப்பினார்.  என்று முடியுமோ இது போன்ற சோகங்கள்  


என்ன கொடுமை சார் இது :


தமிழகத்தில் தமிழக பிரச்சனைக்கு போராடியவர்கள் மீது வழக்கு ( வைகோ, பாரதிராஜா, தங்கர்பச்சான், கவிஞர் தாமரை உள்ளிட்டோர் மீது திடீர் வழக்கு)  பிரச்சனைக்கு காரணமானவர்கள் ( மண்மோகன் சிங் ஒரு வகையில் ) உயர் பாதுகாப்பு

இன்றைய ரவுசு: 


முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று, முல்லைப் பெரியாறு அணையின் அவசர கால நடவடிக்கைகள் திட்டம் உருவாக்க அமைக்கப்பட்ட நிபுணர் குழுவை மத்திய அரசு நிறுத்தி வைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.

கேரளாவிற்கான பஸ் போக்குவரத்து துவக்கப்பட்ட ஒரே நாளில், மீண்டும் பதட்ட நிலை ஏற்பட்டதால், போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

2012 - தேசிய கணித ஆண்டு: சென்னையில் நடந்த 'ராமானுஜர் 125-வது பிறந்தநாள் விழாவில் பிரதமர் அறிவிப்பு.

முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் கேரள அரசின் நடவடிக்கையினைக் கண்டித்து, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் கடையடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம்.

ரசித்தது:


 
Jokes :
"நீங்க உங்க மனைவிக்கு ரொம்ப பயந்து நடப்பவரா?"

 "ச்சே, ச்சே... நடக்கறப்ப அந்த பயத்தை வெளில காட்டிக்க மாட்டேன்." 

மனைவி: நான் இன்று ஒரு டாக்டரை பார்த்தேன். எனக்கு சீதோஷ்ண இடமாற்றம் தேவை என்றும், அதனால் கடற்கரை ஓரமாக சென்று ஒரு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ளச் சொன்னார். நான் எங்கே போகலாம் என்று நினைக்கிறீர்கள்!
கணவன்: வேறு ஒரு டாக்டரிடம்!

மனைவி: நீங்கள் வேலை செய்து கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு என்னால் சும்மா இருக்கமுடியவில்லை.
 கணவன்: பரவாயில்லையே.. இப்போவாவது மனசு வந்ததே..
 மனைவி: நீங்க சமைச்சு வையுங்க.. அதுக்குள்ள நான் ஷாப்பிங் போய்ட்டு வந்துடறேன்.

18 + 

Little Johnny was sitting in class one day.
On this particular day, the teacher wanted to ask her class which part of the body went to heaven first.

One little girl raised her hand and said, "I think your mind goes to heaven first because you have to have a mind in order to believe in God. The teacher praises the little girl, as a little boy raised his hand.
The little boy says, "I think your heart goes to heaven first because God is all about love."
"Very good," said the teacher.

The teacher looked up and saw Little Johnny's hand up. "Oh no", she thought, "I'm not gonna like this.
Little Johnny, which part of the body do you think goes to heaven first?"
Little Johnny thinks for a minute and says, "Your feet."
The teacher asked him why he thought your feet go to heaven first. He replied, "Well, I was walking past my parents' bedroom last night and my mom had her feet up in the air and she said,

'Oh God, I'm coming!'"



உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

Friday, December 23, 2011

ஒன்று கூடுவோம்...வாரீர்..


நம் உரிமையை, நம் உணர்வை, முல்லை பெரியாறு அணையை காக்க ஒன்று கூடுவோம்.

இடம்: மெரினா, கண்ணகி சிலை அருகில்
நாள் : டிசம்பர் 25 - 2011
நேரம்:  மாலை 3.00மணி


To save our rights, To protect the Mullai Periyaru Dam please join together

Place : Marina Beach, Near kannagi statue.
Date  : December 25 - 2011
Time  :  3.00 PM


Wednesday, December 21, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

இந்த வாரம் தமிழகத்தில் இரண்டு முக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது

1 . சனி பெயர்ச்சி 2 . சசி பெயர்ச்சி



முதலாவது பெயர்ச்சி 2 1/2 வருடத்திருக்கு ஒரு முறை நடைபெறும் அனால் இரண்டாவது பெயர்ச்சி எபோதாவது தான் நடை பெறும். முதலாவது பெயர்ச்சி நிலையானது இரண்டாவது நிலையற்றது.

இரண்டாவது பெயர்ச்சியை ஆ தி மு க வினர் தொண்டர்கள் பெருவாரியாக கொண்டாடினர் ஆனால் தலைவர்கள் கொண்டாட வில்லை அவர்களுக்கு தெரியும் இது நிரந்தரம் இல்லை என்று ஆனால் பாவம் தொண்டர்கள்.

சில பத்திரிகைகள் குறிப்பாக தினமலர் போன்ற பத்திரிகைகள் சசிகலாவை தாக்கி கட்டுரைகள் எழுதி வருகிறது அதாவது சசிகலா மோசமானவர்... மோசடியானவர் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் சசிகலாவினால் தான் ஊழல் நடை பெற்றது ஜெயலலிதாவிற்கு தெரியாமல் அரசு நிர்வாகத்தில் தலை இட்டார் அதுவும் இல்லாமல் சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தினர் ஆ தி மு க வை ஆட்டி படைத்தனர் என்றும் சொல்லுகின்றனர்.

மொத்தத்தில் அவர்கள் சொல்ல வருவது என்னவென்றால் ஜெயலலிதா அப்பாவி அவரை ஏமாற்றி விட்டனர் என்று எனக்கு என்ன சந்தேகம் என்றால் ஜெயலலிதா இவர்கள் கூறுவது போல் அப்பாவி என்பது உண்மையானால்

இவர் எந்த தகுதியை வைத்து தமிழக முதல்வர் பதவிக்கு போட்டி இட்டார் தன்னுடைய சொந்த வீட்டை நிர்வாகிக்க தெரியாத இவர் தன்னுடைய சொந்த வீட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாத இவர் எப்படி தமிழக மக்களை பாதுகாத்து நல்லாட்சியை வழங்குவார்.

நாளைக்கு இதே சசிகலா திரும்ப ஜெயலலிதாவிடம் சென்று அடைந்தால் இந்த பத்திரிகைகள் என்ன சொல்லும் ?

மொத்தத்தில் என்னமோ நடக்கிறது அது எதற்காக என்று தெரியவில்லை சொத்து குவிப்பு வழக்கை திசை திருப்புவதற்கவா அல்லது வேறு காரணத்திற்குகா என்று போக போக தெரிந்துவிடும்.

ஆனால் இந்த பத்திரிகைகள் "முதல்வர் ஜெயலலிதாவின் தவறுகளுக்கெல்லாம் மூல காரணம் சசிகலா குடும்பம்தான் என்றால், சமச்சீர் கல்வி குளறுபடிகள், தலைமைச் செயலக மாற்றம், அண்ணா நூலக இடமாற்றம், பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, கவனிப்பற்ற தமிழக சாலைகள், ஆட்சிக்கு வந்த ஆறே மாதங்களில் திறமையற்ற நிர்வாகி என பெயரெடுத்தது" இதற்கெல்லாம் காரணம் 'சசிகலா' என்று சொல்லாமல் இருந்தால் சரி !

அனால் அடுத்த நாடாளுமன்றம் தேர்தலுக்கு முன் ஜெயா மற்றும் சசி ஒன்றிணைவது உறுதி ஏன் என்றால் ஜெயலலிதாவிற்கு தேவர் ஜாதி ஓட்டுகள் முக்கியம்!!!.


நல்ல கேள்வி: கொடநாடு எஸ்டேட் யாருடையது என்று கேட்டால், அது சசிகலாவுக்குச் சொந்தமானது என்கிறார் முதல்வர் ஜெயலலிதா. ஒருவேலையும் செய்யாத, முன்னாள் வீடியோ கடை உரிமையாளர் ஒருவருக்கு இத்தனை பெரிய எஸ்டேட், அரண்மனைக்கு நிகரான எஸ்டேட் பங்களா எப்படி சொந்தமானது? அந்த பங்களாவை தமிழக அரசின் தற்காலிக தலைமைச் செயலகமாகவே மாற்றி வைத்துள்ளது எப்படி?.

இன்றைய ரவுசு: 
  1. கன்னியில் இருந்து துலாம் ராசிக்குப் பெயர்ந்தார் சனிபகவான் 
  2. கேரளாவில் கல்லடி; தமிழகத்தில் தடியடி: ஐயப்ப பக்தர்களின் அவல நிலை 
  3. லோக்பால் மசோதாவை ஏற்க மாட்டேன்; உண்ணாவிரதம் இருப்பேன், சிறைகளை நிரப்புவேன்- ஹசாரே
  4. பகவத் கீதையை தேசிய நூலாக்க வேண்டும்: பாஜக
  5. ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்! 
  6. கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பாரத் ரத்னா பட்டம் வழங்குவது, அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதியரசருமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்

இந்த வார டீல்

புன்ட்டோவுக்கு ரூ.1.4 லட்சம், லீனியாவுக்கு ரூ.1.75 லட்சம் ஆஃபர்! அதிரடி சலுகைகளை ஃபியட் அறிவித்துள்ளது.



Jokes: 
A dietician was once addressing a large audience in Chicago. "The material we put into our stomachs is enough to have killed most of us sitting here, years ago. Red meat is awful. Vegetables can be disastrous, and none of us realizes the germs in our drinking water. But there is one thing that is the most dangerous of all and we all of us eat it. Can anyone here tell me what lethal product I'm referring to? You, sir, in the first row, please give us your idea."

The man lowered his head and said, "Wedding cake

கனிமொழி ஜாமினை கூடங்குளம் நியூஸ் கவுத்துச்சு,

கூடங்குளம் நியூஸ், முல்லை பெரியாறு கவுத்துச்சு...

முல்லைப்பெரியாறையும் இப்பொ ஜெ நியூஸ் கவுத்திடுச்சு...

####
ஜெயலலிதா சொல்றாங்களாமே, தாங்கஸ் டு வாசன் ஐ கேர்.. தெளிவா பாக்குறாங்களாம்... :))

லத்திகா படத்தின் 500 வது நாள் வீழா விற்கு வருகை தரும் ஒபாமா அவர்களே தங்களை அன்புடன் இந்த பவர் ஸ்டார் வரேவேற்கேறேன்.


உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

Saturday, December 17, 2011

புரியவில்லை

என்னடா புரியவில்லைன்னு ஒரு போஸ்டா யோசிக்காதிங்க... எனக்கு என்ன புரியலனா 


 


விஷயம் 1) தொடர்ந்து பல வாரமா முல்லை பெரியாறு விவகாரத்தில தமிழக மக்கள் போராடுறாங்க, கேரளா அரசாங்கம் இந்திய ஒருமைப்பாடுக்கு எதிரா நடந்துக்குது  அதை பத்தி ஒரு முடிவும் எடுக்காம மத்திய அரசு அமைதியா இருக்கு.

விஷயம் 2) தொடர்ந்து பல மாசமா கூடங்குளத்துல மக்கள் போராடறாங்க ஆனா மன்மோகன் சிங் "கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத் தொடங்கும்ன்னு" ரஷ்யாவில் சொல்லுறாரு.

விஷயம் 3) தொடர்ந்து பல வருசமா தமிழக மீனவன் இலங்கை இராணுவதலா தாக்க படுறாங்க இதுக்கும் ஒரு முடிவு இல்லை அதுவும் மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க மாட்டுது.

விஷயம் 4) காவேரி நீர் பிரச்சனையை இன்னும் முடிக்கல.

விஷயம் 5) உலகத்துல எல்லா இடத்துலையும் தமிழனை மட்டும் அடிக்க தயங்கரதே இல்லை,யோசிக்காம எதை பத்தியும் கவலை படாம அடிக்கறாங்க.

இவ்வளவு விசயத்துல தீர்க்கமான ஒரு முடிவு எடுக்காம இந்திய அரசாங்கம் இருக்கு ஏன் என்று புரியவில்லை.
   

எனக்கு என்னமோ தமிழ்நாட்டு மக்கள் இந்திய குடி மக்களா மத்திய அரசு கருதவில்லையோனு நினைக்கறேன். தமிழன், தமிழ் நாட்டுகாரனா நாலு நாள் கத்துவான் அப்பறம் அவன் அவன் அவன் வேலை பாக்கபோறான் அப்படின்னு ஒரு எண்ணமானு புரியல.

யாரையாவது கேட்ட நம்ம அரசியல்வாதிங்க சரி இல்ல அவங்க கிட்ட ஒரு ஒற்றுமை இல்லை சொல்லு வாங்க அவங்க சொல்லுறது சரின்னாலும் முதல தமிழன் கிட்ட, தமிழ் மக்கள் கிட்ட ஒத்துமை இருக்கானு கேட்டா எனக்கு  என்னமோ இல்லைன்னு தான் தோணுது.

ஏன்யென்றால் ஈழ தமிழர்கள் பிரச்சனை ஆகட்டும் , காவேரி பிரச்சனை ஆகட்டும், கூடங்குளம்  பிரச்சனை ஆகட்டும், முல்லை பெரியாறு பிரச்சனை ஆகட்டும் எதாவது ஒரு பிரச்சனைக்கு மொத்த தமிழ் நாடும் ஒன்ன ஒரே குரல் குடுத்து போராடி இருக்க.. இல்லை ஏன் யென்றால் நம்ம வேலை நமக்கு முக்கியம்.  

இங்க கூடங்குளத்துல தங்கள் உடமை, உயிர் பற்றிய பயத்துல மக்கள் போரடறங்க ஆனா, நம்ம பிரதமர் அசால்டா ரஷ்யா போய் ரஷ்ய உறவு முக்கியம், கொடுத்த வாக்குறுதி காபற்றப்படுமுன்னு சொல்லுறாரு இவரு நமக்கு பிரதமர இல்லை ரஷ்ய நட்டு அடிமையானு தெரியல.

இவர் இந்திய நாட்டின் பிரதமரா, அல்லது ஏகாதிபத்திய நாடுகளின் இந்தியாவிற்கான தூதரா என்று புரியவில்லை.

அதுபோல முல்லை பெரியாறு பிரச்சன்னைய தீர்க்க முடியல அப்பறும் இந்த ஆள் என்ன ம...க்கு அங்க பிரதமரா இருக்காருன்னு தெரியல.

இந்த உலகுத்துல சொந்த நாட்டுல ஒரு மாநிலத்துல இருந்து ஒரு மாநிலத்துக்கு முதன் முதல அகதியா வந்த பெருமை தமிழர்களுக்கு தான் சேரும் அதை வாங்கி தந்த பெருமை இப்போதைய காங்கிரஸ் அரசுக்கு தான் சேரும்.. Mr. Manmohan you did a wonderful job.. simply superb..keep it up...


இலங்கைக்கு பயப்படற முதல் நாடு இந்தியாவா தான் இருக்கும் அதுவும் இந்த தைரியம் இல்லாத இந்த பிரதமரா தான் இருக்கும்.

வெக்கமா இருக்கு இதை எல்லாம் பாக்கும் போது ஒரு நாளைக்கு இந்தியர்கள் தங்களை இந்தியர்னு சொல்ல வெட்க பட கூடிய நாள் வெகு தொலவில் இல்லை இந்த மத்திய அரசாங்கம் அதை கூடிய சிக்கிரம் கொண்டு வந்துடும்.

இலங்கைய அடக்க முடியலையா சொல்லுங்க சொல்லிட்டு ஒவ்வொரு மீனவனுக்கும் துப்பாக்கி கொடுத்து மீன் புடிக்க கடலுக்கு அனுப்புங்க அதுக்கு அப்புறம் தமிழ் மீனவன் தன்னை காப்பாதிக்க முடியாம செத்தாலும் பரவா இல்லை நாங்க உங்களை கேள்வி கேட்க மாட்டோம். 

எங்களுக்கு வேண்டியது முடிவு ஒரு நிரந்தரமான அதை எடுக்க எது தடுக்குதுன்னு புரியவில்லை.

 ஏன் தமிழர்கள் விசயத்துல இவ்வளவு பாகுபாடு நாங்க அப்படி என்ன தப்பு பண்னோம்.

இலங்கை தமிழர் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கூடங்குளம், முல்லைபெரியாறு என்று தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது தமிழர்களை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்துவது நல்லதற்கல்ல.

ஒரு வேலை இந்தியாவின் ஒரு பகுதியா தமிழ்நாடு இருக்க கூடாதுன்னு நினைகறாங்கலோனு புரிய வில்லை ஆனால் இந்த நிலை நீடித்தால் இந்திய துண்டு துண்டாக போகும் என்றால் முதலில் உடையும் மாநிலம் தமிழகமாக தான் இருக்கும்.

ஒரு காலத்தில் ஒற்றுமைக்கு பேர் போன , வீரத்திற்கு பேர் போன, போர் குணம் நிறைந்த தமிழர்கள் இன்று அதை எல்லாம் தொலைத்து விட்டு இன்று எதுவும் அற்று இன்று இந்த மண்ணில் ஒரு புழுவை போல வாழ்கிறார்கலோனு ஒரு சந்தேகம் வருது என்று இந்த நிலை மாறும் என்று புரியவில்லை.


இன்றைய செய்தி : கேரளாவில் இருந்து 170 தமிழ் குடும்பங்கள் விரட்டியடிப்பு

அனால் ஒன்று  மட்டும் நிச்சயம் தமிழ் இனத்திற்கெதிரான துரோகங்கள் நல்லதற்கல்ல.

Tuesday, December 13, 2011

தெரிந்து கொள்ளுங்கள்

இந்தியா என்ற ஒரு நாடு உருவாதற்கு முன்பே இந்த மண்ணை மீட்க போராடிய தமிழர்களின் விவேகம், தமிழர்களின் போர்த் தந்திரம், வீரம் போன்றவைகளை கேட்டால் பூனை கூட புலியாக மாறிவிடும். அந்த அளவு வீரம் செறிந்தது.

கி.பி. 1857 ல் நடைபெற்ற வேலூர் சிப்பாய்க் கலகம் தான் இந்திய விடுதலைப் போராட்டத்தின் தொடக்கம் என வரலாற்று அறிஞர்களும், உலக மாமேதை கார்ல் மார்க்ஸ் -ம் கூறுகின்றனர்.

சிப்பாய்க் கலகத்திற்கு ஒரு நூற்றாண்டிற்கு முன்பே அடக்குமுறைக்கு எதிரான விடுதலைப் போராட்டம் தொடங்கி விட்டது.

தென் தமிழகத்தில் வெள்ளையர்கள் அடக்கு முறைக்கு அஞ்சமாட்டோம் என தம் உயிரையே துச்சமென தியாகம் செய்த மாவீரர்கள் பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றை நாம் பெருமையோடு நன்கு அறிவோம்.

ஆனால், இன்றைய நெல்லை மாவட்டத்தில், சங்கரன் கோவிலிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் வடமேற்கில் உள்ள நெற்கட்டும் செவ்வல் கிராமமும் அதனைச் சுற்றி 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள நெற்கட்டும் செவ்வயல் பாளையமும் ஒரு காலத்தில் நமது சுந்திர போராட்டத்திற்கு முன் மாதிரியாக திகழ்ந்த புண்ணிய பூமி.


அக் காலத்தில் பாளையங்கள் பேரரசுகளுக்கு வரியாக நெல் செலுத்தி வந்ததால் அது நெற்கட்டும் செவ்வயல் பாளையம் என அழைக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

வரிகொடுக்க மறுத்த காரணத்திற்காக ஏற்கெனவே வரி வசூலித்து வந்த முகலாய மன்னர்களும், புதிதாக வரி வசூலிக்கும் உரிமையைப் பெற்ற கிழக்கிந்தியக் கம்பெனியர்களும் கி.பி.1755 ல் முதல் போரைத் தொடுத்தனர்.

இப் போரில் பாளையத்தின் எல்லையிலேயே அவர்களை விரட்டியடித்தார் மன்னன் மாவீரன் பூலித்தேவனும், அவரது தளதியான ஒண்டிவீரனும்.

அன்றைய காலகட்டத்தில், மன்னர் மாவீரன் பூலித்தேவன் மேல் படை எடுப்பதற்காக, வெள்ளையர்கள் தென்மலை என்ற இடத்தில் முகாமிட்டிருந்தனர்.

மன்னன் மாவீரன் பூலித்தேவனின் படை வீரர்கள் சண்டையிட வரும் போது அவர்கள் மீது பீரங்கியால் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு அவற்றில் வெடி மருந்தும் நிரப்பி வைத்திருந்தனர் வெள்ளையர்கள்.

வெள்ளையர்களின் நவீன யுத்த ஆயுதமான பீரங்கிகளை எதிர்த்து அன்றைக்கு யுத்தம் செய்வது நினைத்து பார்க்க கூட முடியாத விஷயம் என்றே கூறலாம்.

இதனால், வெள்ளையர்களை அவர்களது பீரங்கியையே வைத்தே கதையை முடித்துவிட வேண்டும் என முடிவு கட்டினான் மன்னன் பூலித்தேவன்.

அந்த ஆற்றல்மிகு செயலை செய்ய சரியான வீரன் ஒண்டிவீரன் தான் என்று முடிவு செய்து, வெள்ளையர்கள் முகாமிற்கு ஒண்டி வீரனை அனுப்பி வைத்தார் மன்னன் பூலித்தேவன்.

இரவு வேளையில் மை இருட்டில் தென் மலையில் உள்ள எதிரி முகாமிற்கு தன்னந்தனியாக சென்றான் ஒண்டிவீரன். வெள்ளையர் படை வீரர்களின் கண்களில் மண்ணைத் தூவி விட்டு முகாம் ஓரமாய் உள்ள மலைச் சரிவில் பதுங்கிக் கிடந்தான் ஒண்டி வீரன் .

தான் பதுங்கி இருப்பதைப் படையினர் பார்த்து விட்டால், மன்னன் கட்டளையும் நிறைவேற்ற முடியாது, இந்த மண்னையும் காப்பாற்ற முடியாது என்பதற்காக, தன்மேல், இலைதளைகளை அள்ளிப் போட்டுக் கொண்டு பதுங்கி கிடந்தான் மாவீரன் ஒண்டிவீரன்.

அப்போது அங்கு வந்த படை வீரன் ஒருவன், குதிரை ஒன்றைக் கட்டுவதற்காக இரும்பாலான ஈட்டி ஒன்றைத் தரையில் குத்தினான்.

ஈட்டியை தரையில் ஓங்கி குத்தும் போது ஒண்டிவீரனின் கையை பிளந்து கொண்டு அது மண்ணில் குத்தி நின்றது. அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு அந்த இடத்திலேயே வலியோடு துடிதுடித்து கிடந்தார் ஒண்டிவீரன்.

ஆனால், ஒண்டிவீரனின் சபதம் வெற்றிப்படிகளை நோக்கி சென்று கொண்டு இருந்தது என்பது அந்த வீரர்களுக்குத் தெரியவில்லை.

எதிரியின் வீரர்கள் கண்ணயர்ந்த நேரத்தில் ஒண்டிவீரன், தனது கையை ஈட்டியில் இருந்து பிடுங்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

ஒரு வேளை குதிரை கணைத்து விட்டால் தனக்கும் ஆபத்து, தனது நாட்டிற்கும் ஆபத்து என்பதை உணர்ந்து இடுப்பில் செருகியிருந்த வாளை தனது மற்றொரு கையில் எடுத்து தானே வெட்டிக் கொண்டு எழுந்தான் ஒண்டிவீரன்.

புயலுக்கு சவாலாக குதிரையைக் கிளப்பிக் கொண்டு வெங்கல நகராவை ஒலித்து விட்டுப் புறப்பட்டார் மாவீரன் ஒண்டிவீரன்.

எதிரிகள் வந்துவிட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு பீரங்கியை இயக்கினார்கள் வெள்ளை வீரர்கள். அப்போது பீரங்கிக் குண்டுகள் தங்கள் முகாம் மீதே வெடித்து சிதறியதை கண்டு பதைபதைத்து, அதிர்ந்து, அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்றுவிட்டது ஆங்கிலேய படை. இதில் வெள்ளையர் முகாம் மட்டும் அல்ல ஆயிரக்கணக்கான வீரர்களும் செத்து மடிந்தனர்.

இந்த மண் தமிழனுக்கு தான் சொந்தம் என எதிரிகளை விரட்டி விரட்டி அடித்த பூலித்தேவன் கி.பி. 1767 ல் மறைந்தார். அதே போல 1771 வரையில் எதிரிகளுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார் தளபதி ஒண்டிவீரன். எதிரிகளின் முகாமை அழித்த தென்மலைப் போரோடு ஒண்டிவீரனின் சகாப்தம் முடிந்து போனது.

ஆனால், ஒரு குறிப்பிட்ட காலம் வரை பூலித்தேவனின் குடும்பத்தாரைப் பாதுகாத்து வந்தார் தளபதி ஒண்டிவீரன். இரு சமூகங்களின் காவல் தெய்வங்களாக இன்று மாறி நிற்கிறார்கள் தாயகத்திற்காகப் போராடிய பூலித்தேவனும், ஒண்டி வீரனும்.



நன்றி - tamil.oneindia.in

Monday, December 12, 2011

மன்னன் @ 62

போன வருடம் நான் கனவு கூட காணவில்லை நான் ஒரு BLOG ஆரம்பிப்பேன் என்று அதில் நான் விரும்பும், நேசிக்கும் இந்த உயர்ந்த, வாழும் சகாப்த்தை பற்றி ஒரு பதிவு போடுவேன் என்று நினைக்கவே இல்லை.

இந்த மனிதரிடம் என்ன இருக்கிறது என்று கேட்டால் ஒன்றும் சொல்ல தெரியவில்லை ஆனால் அவரிடம் என்னமோ ஓர் ஈர்ப்பு இருக்கிறது .

அவர் பெயரை யாராவது சொல்லக் கேட்டால் அல்லது ஏதாவது பத்திரிகையில் அவரை பற்றி படிக்கச் நேரிட்டால் மனதில் ஒரு உற்சாகம் தோன்றுவதை மறுக்க முடியாது.

அவர் பெயரை திரையில் பார்க்கும் பொழுது மனதில் உற்சாகம் பொங்கி உற்சாகத்தில் "தலைவா... " என்று கத்துவதை தவிர்க்க முடியாது.

அவர்தான் தமிழ் திரையுலக "தங்கமகன்"

தமிழக மக்களுக்கு கிடைத்த "முத்து" 

இந்திய திரையுலக BOX OFFICE "பாட்ஷா"

என்னை போன்ற பல லட்ச ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் "மன்னன்".


எங்கள் SUPER STAR ரஜினி அவர்கள்தான்.

இவர் ஒரு சகாப்தம், சாதனை மனிதர் இவரை பற்றி பாராட்டாத பத்திரிகை இல்லை , இவர் புகழ் பாடாத தொலைக்காட்சி இல்லை, இவர் பெயரை பயன்படுத்தி சம்பதிகாதவர்கள் இல்லை சமிபத்திய உதாரணம் "ரா-ஒன்" இவர் நடிக்காத அந்த திரைபடத்தில் நடித்தாக விளம்பரபடுத்தியத்தை பெருந்தன்மையுடன் ஏற்று கொண்டு அதை அனுமதித்தார்.

அவரை பற்றி எவ்வளவோ பேர் புகழ்ந்து பாராட்டி இருப்பார்கள். அவர் அணியாத புகழ் மாலை இல்லை நான் ஒன்றும் புதியதாக புகழ போவதும் இல்லை சொல்ல போவதும் இல்லை ஒரு ஏழை ரசிகனின் எளிய வாழ்த்தை இந்த பதிவில் பதிவு செய்கிறேன்.

அவரை போன்ற எளிய மனிதனை இனிமேல் பார்க்க முடியாம என்பதே ஒரு கேள்விகுறி ? அவரை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்தவர்களும், அவர் பெயரை   பயன்படுத்தி பலன் பெற்றவர்கள் உண்டு பின்பு அவர் காலை வாரி விடத்துணிந்தவர்களும் உண்டு.

அவரை பார்த்து பொறமை பட்ட நடிகர்களும் உண்டு அவரை எதிர்த்த நடிகர்களும் உண்டு ஆனால் அவர்களை எல்லாம் தன்னிடம் இருந்த எளிய ஆயுதத்தால் வெற்றி கொண்டார்.

அந்த ஆயுதம் தன "மறப்போம் மன்னிப்போம்". அந்த அன்பினால் தன்னை எதிர்த்தவர்களை மட்டுமல்ல என்னை போன்ற பல லட்சகணக்கான ரசிகர்களையும் தன வசமாக்கி அவர்கள் மனதை கொள்ளை கொண்டார்.


இத்தகைய அன்பு மனிதர் உடல்நலக் குறைவால் மருத்துவமன்னையில்    அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி வெளியானபோது இந்த தமிழ் நாடே பதறியது என்றல் மிகையாகாது.  தன் வீட்டில் உள்ளவர்களுக்கு நேர்ந்தது போல் அனைத்து ரசிகர்களும் துடிதுடித்தனர்.

அவர் சிகிச்சைகாக வெளிநாட்டிருக்கு செல்கிறார் என்றபோது தமிழ்நாட்டில் உள்ள லட்சகணக்கான ரசிகர்கள் மட்டும்மில்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அத்தனை நல்ல உள்ளங்கள் அவருக்க வேதனை அடைந்தது. அவர் நல்லபடியாக குணமாகி திரும்ப வேண்டும் என்று  கடவுளிடம் பல லட்சகணக்கான மக்கள் வேண்டினர். வேண்டுதலும் பலித்து நல்லபடியாக நாடு திரும்பினார்.

அந்த இனிய மனிதர் திரும்புவதை காண எர்போர்டில் ஆயிரகணக்கான ரசிகர்களும், டிவியின் முன் பல லட்ச மக்கள் காத்து கிடந்தனர். அவர்கள் வேண்டுதலும், காத்திருத்தலும் ஆண்டவன் அருளால் வீண் போகவில்லை அவர் நல்ல படியாக நாடு திரும்பினார்.


இது நிறைய பேருக்கு பைதியகாரதனமாக  இருக்கலாம் ஆனால் இது ஒரு தூய்மையான அன்பு. இந்த அன்பு எதையும் எதிர்பார்க்காத அன்பு.

அவர் பூமிக்கு வந்த இந்த நல்ல நாளில் அவர் மேன் மேலும் சிறந்து, பல அடைய முடியாத உயரங்களையும், நல்ல ஆரோக்கியமும், சந்தோசத்தையும் அந்த ஆண்டவன் தர வேண்டும் என்று பிராத்தனை செய்கிறேன்.


அவர் என்றுமே இந்திய திரையுலக முடிசூடா மன்னன்.


One and Only superstar for Tamil cinema


Happy Birthday Super Star


Thursday, December 8, 2011

அணு மின் நிலையம்?

கூடங்குளம் அணு மின் நிலையம் இன்று தென் தமிழகத்தின் முக்கிய பிரச்னை ஒரு பக்கம் வேணுமுன்னு சொல்லுறாங்க வேண்டாமுன்னு சொல்லுறாங்க வேணுமுன்னு சொல்லறவங்க எல்லாம் அவங்க விடு பக்கத்துல வேனுமுனு சொல்லவில்லை  கூடன்குளதுல தான் வேணுமுன்னு சொல்லுறாங்க ஏன் நாளைக்கு பிரச்னைனு வந்தா அவங்க பாதிக்கபடமாட்டாங்க.




என்னோட கேள்வி என்னனா அணு மின் நிலையம் தேவையா. எவ்வளவோ அணு மின் நிலைய  விபத்து நடந்து இந்த உலகம் பாத்து இருக்கு ஆனாலும் நம்ம அரசு இந்த மின் நிலையம் வேணுமுன்னு சொல்லுறாங்க  கேட்ட 13,615  கோடி செலவு பன்னி இருகாங்க அது வீணா போய்டுமூணு  சொல்லுறாங்க.
எனக்கு என்ன தோனுதுனா மக்களை விட, இந்த பணம் தான் முக்கியமா?


ஒத்துக்கிறேன்  கரண்ட் தேவை இந்த நாட்டுக்கு ஆனா அதை எடுக்கறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு உதாரனத்துக்கு சூரிய ஒளியில் இருந்து கரண்ட் எடுக்கலாம். நம்ம நாட்டுல அளவுக்கு அதிகமா சூரிய் சக்தி வீணாக்கபடுது. 


சரி ஏன் அணு மின் நிலையம் வேணாமுன்னு சொல்லுறாங்க அதுலா என்ன பிரச்சன்னை எதுக்கு வேணாம் சொல்லுறாங்க ?


ஜப்பான்ல சுனாமி (2011) வந்து அந்த நாடு பெரிய பிரச்சனை சந்திச்சது அதுலா முக்கியமானது புகுஷிமா டைய்ச்சி(Fukushima Daiichi) அணு மின் நிலையம் மிக பெரிய அழிவ சந்திச்சது என்ன மாதிரியான்ன அழிவுனா அந்த அணு மின் நிலையம் இருந்த பகுதில விளைஞ்ச உணவு பொருட்களை எதுவும் விக்க கூடாதுன்னு தடை போட்டு இருகாங்க அந்த அளவுக்கு மிக பெரிய சேதாரம் உருவாக்கி இருக்கு ஒரு அணு மின் நிலையம். இது ஒரு உதாரணம் இன்னும் ஏகப்பட்ட அழிவுகள் உருவாக்கி இருக்கு.


இத்தனைக்கும் அந்த அணு மின் நிலையம் மிக சிறந்த, மிகவும் உறுதியான, பாதுகாப்பானது அப்படின்னு சொன்னாங்க எந்த அளவுக்கு பாதுகாப்பானதுனா நில நடுக்கம் 8 .8 /8.9 ரிக்டர் அளவு வந்தா கூட ஒன்னும் ஆகாதுன்னு சொன்னாங்க ஆனா என்ன ஆச்சு மிக பெரிய சீரழிவு அந்த நாடு சந்திச்சது




அங்க மட்டும் இல்ல இப்ப இங்க கூடங்குளத்துல அணு மின் நிலையம் கட்டுற ரஷ்ய நாட்டுலயும் இந்த மாதிரி ஒரு விபத்து 1986 ல நடந்துச்சு. அதை பற்றி இங்க படிங்க.




நிறைய பேரு கேக்கலாம் எதுல தான் ரிஸ்க் இல்ல வாழ்கையே ஒரு ரிஸ்க் தானேனு கேக்கலாம். வாழ்கைல எதுவும் நிலையானது சொல்ல முடியாது   அதுக்காக நாம்மா எல்லாம் நிமிசம் ரிஸ்க் எடுக்கறது இல்ல குறைந்த பட்சம்  நாம் துங்கும் போது நிம்மதியா துங்கனும்.


ஒரு சராசரி குடிமகன் ஒரு அரசாங்கத்துகிட்ட அடிப்படை எதிபார்ப்பு என்ன என்றால் ஒரு அடிப்படை பாதுகாப்பு தான் அதை தரவேண்டியது ஒரு அரசாங்கத்தோட கடமை மக்கள் இந்த அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு இல்லை என்று நினைகிறார்கள் அப்படி நினைக்கும் போது அரசாங்கம் அதை கை விட வேண்டும்.


ஜெர்மனி போன்ற நாடுகள் அந்த முடிவை எடுத்து இருக்கும் போது நமது அரசாங்கமும் எடுக்க வேண்டும் என்பது தான் என் போன்ற சராசரி குடிமகன் எண்ணம்.


கூடங்குளத்துல அணு மின் நிலையம் கட்டுறதுக்கு நம்ம நாட்டு மதிப்பில் 13,615  கோடிகள் செலவு செய்து 2000 மேகவாட்ஸ் மின்சாரம் எடுக்கறாங்க ஆனா அந்த காசில் 9 நகரத்திற்கு சூரிய ஒளி முலம் மின்சாரம் தரலாம்.


அணு மின் நிலையம் சாதக மற்றும் பாதங்களை  கிளிக் செய்து படிக்கவும்.


மிக பெரிய அளவுல பொருளாதாரரீதியா, தொழிநுட்பரீதியா வளர்ந்த நாடுகளானா ஜப்பான், ரஷ்ய இந்த மாதிரியான பேரழிவுகளை தடுக்க முடியல லஞ்ச ஊழல்கள் நிறைந்த நம்ம நாட்டுல கட்டப்படுகின்ற இந்த மாதிரியான அணு மின் நிலையங்கள் எந்த அளவுக்கு உறுதியா, பாதுகாப்பா இருக்கும் என்பது தான் என் கவலை. அது மட்டுமில்லாமல் மனித தவறுகளால் அல்லது இயற்கை சீற்றங்களால் மிக பெரிய பேரழிவுகளுக்கு வாய்ப்பு உண்டு அதில் இருந்து இப்போதைய தலைமுறை மட்டும்மில்லாமல் அடுத்த தலைமுறையும் காப்பாற்ற வேண்டும். அந்த பேரழிவு இந்த மண்ணின் வாழும் சூழலை கெடுத்து விடும்.




அடுத்த தலைமுறைக்கு நாம் நல்ல மக்கள் வாழும் சூழ்நிலை தரவேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை நம்மளுடைய இப்போதைய சந்தோசதிற்கு சுயநலத்திற்கு அடுத்த தலைமுறை வாழ்கை சூழலை அழிக்க கூடாது என்பது என் கருத்து...
  

Wednesday, December 7, 2011

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)



முல்லை பெரியாறு பிரச்சனைகாக தமிழக ஐயப்ப பக்தர்கள் மீது கேரளாவில் சரமாரி தாக்குதல் ஆனா நாம அமைதியா இருக்கோம். நம்மா வேலைய நாம பாத்துட்டு இருக்கோம். இது ஏன் தெரியல மொதல மலேசிய, சிங்கப்பூர் அப்புறம் இலங்கை ஆரம்பிச்சு அப்படியே மகாராஷ்டிரா, கர்நாடக,கேரளா வழியா வந்து இப்போ தமிழ் நாட்லேயே அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க.


 இன்னும் எவ்வளவு நாளுக்கு தான் இப்படியே அடி வாங்க போறாங்களோ தெரியல எதுக்கும் ஒரு முடிவு வேனும் அதனால இப்படி அடி வாங்கறதுக்கும் ஒரு முடிவு கட்டணும். 


இத்தனைக்கும் மலையாளிகள் சாப்பாட்டுல இருந்து எல்லாத்துக்கும் நம்மல தான் எதிர் பார்த்துட்டு இருக்கனுங்க அப்பவே நம்மல அடிக்கறாங்க. 


தேனி மாவட்டத்தில் இருந்து இடுக்கி ஏலக்காய் எஸ்டேட்டிற்கு வேலைக்கு சென்ற பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இதை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


இப்படியே போச்சுனா அப்பறம் டைம் பாஸுக்கு எல்லாம் அடிப்பாங்க அப்படி அடிக்கும்போது அடி வாங்கறவங்க நாமளா கூட இருக்கலாம் ஜாக்கிரதை!!! அதனால யாருக்கோ பிரச்சனைனு சும்மா இருக்காதிங்க உங்கள முடிஞ்சது செய்யுங்க தமிழர்களுகா,உங்களுகா, நமக்காக.

நல்ல கேள்வி:  நில நடுக்கம் உள்ள பகுதியில் புதிய அணை கட்டினால் மட்டும் பாதுகாப்பாக இருக்குமா?- தா.பாண்டியன்..


இன்றைய ரவுசு: தமிழகத்தில் கேரள மாநிலத்தவரின் கடைகள் உடைப்பு,நாடாளுமன்றம் முன்பு திருமாவளவன் உண்ணாவிரதம்,
எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் - கேரளாவுக்கு சீமான் எச்சரிக்கை ,
தமிழகத்தில் டிச.15-ல் சினிமா காட்சிகள் ரத்து


இந்த வார டீல்: ஆண்டு தள்ளுபடி விற்பனையாக ஆரியாவுக்கு ரூ.2 லட்சம் என்ற அதிரடி தள்ளுபடி சலுகையை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது யாராவது டாட்டா கார் வாங்கணும் ஐடியா வச்சு இருக்கறவங்க use  பண்ணிகோங்க. 




வேலை வாய்ப்பு பற்றி : 
InfoSys recruits fresher for details click and view the below given image




Song of the Week:  




Jokes: 
Wife: "ஏங்க! இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கணும்! இல்ல உங்க அம்மா இருக்கணும்!" 
Husband: "நீங்க ரெண்டு பேருமே கௌம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்."


தந்தை: உன்னைமாதிரி சிறுவனாக இருக்கும்போது நீ கேட்பது மாதிரி கேள்விகள் என் அப்பாவை கேட்டிருந்தால்... மகன்: இப்போது நான் கேள்வி கேட்கும்போது முழிக்காம இருந்திருக்கலாம்!!!!


உங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன் 

முதல் படி.. முதல் அடி...


நீண்ட நாட்களாக ஓர் வலைபதிவு தொடங்க வேண்டும் என்று ஆவல் அது இன்று தான் நிறைவேறியது. வலையுலகில் ஏகப்பட்ட வலைபதிவுகள் அதில் நான் என்ன புதிதாக செய்து விடபோகிறேன் என்றும் ஓர் எண்ணம் இருந்தாலும் ஒரு முயற்சி செய்து பார்போம் எனது கருத்துகளையும், ரசனைகளையும் ரசிப்பதற்கு யாராவது இருப்பார்கள் என்ற நம்பிகையில் தொடங்கிவிட்டேன்.


சிறிய வயதில் அடிக்கடி பள்ளி விட்டு பள்ளி மாற்றி பயில வேண்டிய சுழலில் வளர்ந்தேன் ஏன் என்றால் என் தந்தை காவல் துறை இலாகவில் ஓர்  அதிகாரி ஆதலால் அடிக்கடி இடமாற்றம் ஏற்படுவதுண்டு அப்போதெல்லாம் புதிய பள்ளிகளுக்கு செல்லும் பொது ஓர் அச்சஉணர்வு ஏற்படும் அது இந்த பள்ளியில் படிப்பவர்கள் நம்மை நண்பர்களாக,சகமாணவனாக ஏற்று கொண்டு நம்மை ஆதரிப்பார்களா என்று எல்லாம் பள்ளியில் சேரும்போது தோன்றும் ஆனால், அந்த எண்ணங்களை பள்ளியில் கிடைக்கும் புது நண்பர்கள் தவிடு பொடியாக்கி விடுவார்கள் என்னை நண்பனாக ஏற்று கொண்டு. 


சில நண்பர்கள் நமக்கு வித்தியாசமாக கிடைப்பார்கள் அது எப்படி என்றால் நான் ஏழாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு சென்னையில் படிக்கும் சுழல் ஏற்பட்டது அதனால் இங்கு பூவிருந்தவல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு சேர்ந்தேன்.


முதல் நாள் பள்ளிக்கு சென்ற நான் நாசர் என்ற மாணவனை சந்தித்தேன் அப்போது அவன் கடந்த பள்ளியில் எத்தனாம் ரேங்க் எடுப்பாய் என்று கேட்டான் நான் இரண்டாம் ரேங்க் எடுப்பேன் என்று சொன்னேன் அதற்கு அவன் இங்கே எல்லாம் உன்னால் நன்காம் ரேங்க் கூட எடுக்க முடியாது என்று இளக்காரமாக கூறினான் நான் அதையே ஓர் சவாலாக எடுத்து கொண்டு முதலில் நான்கு, அப்புறம் இரண்டு என எடுத்து ஒரு வழியாக அரையாண்டு தேர்வில் முதல் ரேங்க் எடுத்தேன். எங்களிடையே ஏற்பட்டஇந்த  போட்டி நல்ல நண்பர்களாக ஆக்கியது.




அது போல தான் இப்போது இந்த பதிவுலகில் முதல் அடி எடுத்து வைத்துள்ளேன் என்னை எப்படி ஏற்று கொள்வார்கள் ஓர் நண்பனாக, சகோதரனாக அல்லது ஓர் குடும்ப உறுப்பினராக ஏற்று கொள்வார்களா என்ற சிந்தனையில் இன்று எனது முதல் பதிவை பதிவு செய்கிறேன் இருந்தாலும் என்னுள் ஓர் நம்பிகை இந்த பதிவுலகம் ஏற்று கொள்ளும் எனது முயற்சிகளுக்கு ஊக்கமும், ஆதரவும் தரும் என்றும், எனது தோழன் நாசர் போன்று பல தோழர்களையும் கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் தொடங்குகிறேன்.

--
என்றும் அன்புடன் 
ரா.ராஜா 

Tuesday, December 6, 2011

அடிக்கடி பறப்பவர்களுக்காக ‘குளோபல்’ மொபைல்போன்!


அடிக்கடி வெளியூர் மற்றும் வெளிநாடு செல்பவர்கள் அங்கு சென்றதும் அங்குள்ள நெட்வொர்க்குக்கு தங்களது போனை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கும். இது ஒரு பெரிய பிரச்னையாக இருக்கிறது.
ஆனால், குளோபல் போன் என்று கூறப்படும் மொபைல்போன்கள் எந்த ஊர் மற்றும் நாட்டிற்கு சென்றாலும் அந்த நெட்வொர்க்கிற்கு எளிதாக மாற்றிக்கொள்ளும்  வசதியை வழங்குகின்றன.
இதேபோன்று, ஏற்கனவே வந்த ஸ்நாட்ஃபோன் தற்போது மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன்  ஸ்நாப்போன் இஎஸ் ஒன்-சி என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் அடிக்கடி பயணம் செய்பவர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
4 ப்ரீக்குவன்சிகளில் நெட்வொர்க்கை சப்போர்ட் செய்வதால் இந்த போன் எந்த ஊருக்கு அல்லது எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அங்குள்ள நெட்வொர்க்கை பொறுத்து தானாகவே மாற்றிக்கொள்ளும் வசதியை கொண்டிருக்கிறது.
ஸ்நாப்ஃபோன் இஇசட் ஒன்-டி என்ற பெயரில் வந்துள்ள இந்த புதிய போன் 1.6 இஞ்ச் எல்சிடி திரையை கொண்டிருக்கிறது. இந்த போனின் பின்புறத்தில் அவசர உதவிக்கான அழைப்புகளை செய்யும் வகையில் எஸ்ஓஎஸ் பட்டனை கொண்டிருக்கிறது.
எப்எம் ரேடியோ வசதியையும் கொண்டிருக்கிறது. ஆனால், புளூடூத் இல்லாதது குறையாக இருக்கிறது. இந்த புதிய மொபைல்போன் ரூ.3,000 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

தெரிந்து கொள்ளுங்கள்

தலையில் கட்டுக் குடுமி, காதில் கடுக்கன். அவன் நெற்றியில் பளிச்சென்று திருநீறு. ஒளி உமிழும் கண்கள் கொண்ட சிறுவன் சாமிநாதன்.

அந்தப் பையன் மேலே என்ன படிப்பது என்பது விவாதப் பொருள். கூடத்தில் சேரில் சாய்ந்திருந்த குடும்பப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. ""இதபார்... ஒண்ணு சம்ஸ்கிருதம் படி... அல்லது இங்கிலீஷ் படி. இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்திலேயே சவுக்கியமா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா இங்க இல்லேன்னாலும் பரலோகத்துல சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற?''"

"தமிழ் படிக்கப் போறேன்'' என்றான் சிறுவன். "ஏன்?'' உறுமினார் பெரியவர்.

"இங்கிலீஷ் படிச்சா இங்க நன்னா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா அங்க நன்னா இருக்கலாம். தமிழ் படிச்சா இரண்டு இடத்தலேயும் நன்னா இருக்கலாம்'' என்று பளிச்சென்று பதில் சொன்னான் சிறுவன் சாமிநாதன்.

அவர் தமிழ் படித்ததால்தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது. அவர்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

எல்லோரும் தமிழ் படியுங்கள் என்பது என் செய்தி அல்ல. உகந்ததைத் தேர்ந்தெடுத்து உறுதியாகப் படிப்பவர்கள் உருப்படுகிறார்கள்... உயர்கிறார்கள் என்பதே என் செய்தி.