Search This Blog

Tuesday, December 6, 2011

தெரிந்து கொள்ளுங்கள்

தலையில் கட்டுக் குடுமி, காதில் கடுக்கன். அவன் நெற்றியில் பளிச்சென்று திருநீறு. ஒளி உமிழும் கண்கள் கொண்ட சிறுவன் சாமிநாதன்.

அந்தப் பையன் மேலே என்ன படிப்பது என்பது விவாதப் பொருள். கூடத்தில் சேரில் சாய்ந்திருந்த குடும்பப் பெரியவர் குரல் ஓங்கி ஒலித்தது. ""இதபார்... ஒண்ணு சம்ஸ்கிருதம் படி... அல்லது இங்கிலீஷ் படி. இங்கிலீஷ் படிச்சா இந்த லோகத்திலேயே சவுக்கியமா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா இங்க இல்லேன்னாலும் பரலோகத்துல சவுக்கியமா இருக்கலாம். நீ என்ன படிக்கப் போற?''"

"தமிழ் படிக்கப் போறேன்'' என்றான் சிறுவன். "ஏன்?'' உறுமினார் பெரியவர்.

"இங்கிலீஷ் படிச்சா இங்க நன்னா இருக்கலாம். சம்ஸ்கிருதம் படிச்சா அங்க நன்னா இருக்கலாம். தமிழ் படிச்சா இரண்டு இடத்தலேயும் நன்னா இருக்கலாம்'' என்று பளிச்சென்று பதில் சொன்னான் சிறுவன் சாமிநாதன்.

அவர் தமிழ் படித்ததால்தான் இன்று தமிழே நன்றாக இருக்கிறது. அவர்தான் தமிழ்த் தாத்தா டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர்.

எல்லோரும் தமிழ் படியுங்கள் என்பது என் செய்தி அல்ல. உகந்ததைத் தேர்ந்தெடுத்து உறுதியாகப் படிப்பவர்கள் உருப்படுகிறார்கள்... உயர்கிறார்கள் என்பதே என் செய்தி.

2 comments:

  1. நன்றாக உள்ளது...

    ஏதாவது தொழில் நுட்ப உதவி தேவையானால் கேளுங்கள் சகோ...

    mathisutha56@gmail.com

    ReplyDelete