Search This Blog

Thursday, December 8, 2011

அணு மின் நிலையம்?

கூடங்குளம் அணு மின் நிலையம் இன்று தென் தமிழகத்தின் முக்கிய பிரச்னை ஒரு பக்கம் வேணுமுன்னு சொல்லுறாங்க வேண்டாமுன்னு சொல்லுறாங்க வேணுமுன்னு சொல்லறவங்க எல்லாம் அவங்க விடு பக்கத்துல வேனுமுனு சொல்லவில்லை  கூடன்குளதுல தான் வேணுமுன்னு சொல்லுறாங்க ஏன் நாளைக்கு பிரச்னைனு வந்தா அவங்க பாதிக்கபடமாட்டாங்க.




என்னோட கேள்வி என்னனா அணு மின் நிலையம் தேவையா. எவ்வளவோ அணு மின் நிலைய  விபத்து நடந்து இந்த உலகம் பாத்து இருக்கு ஆனாலும் நம்ம அரசு இந்த மின் நிலையம் வேணுமுன்னு சொல்லுறாங்க  கேட்ட 13,615  கோடி செலவு பன்னி இருகாங்க அது வீணா போய்டுமூணு  சொல்லுறாங்க.
எனக்கு என்ன தோனுதுனா மக்களை விட, இந்த பணம் தான் முக்கியமா?


ஒத்துக்கிறேன்  கரண்ட் தேவை இந்த நாட்டுக்கு ஆனா அதை எடுக்கறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு உதாரனத்துக்கு சூரிய ஒளியில் இருந்து கரண்ட் எடுக்கலாம். நம்ம நாட்டுல அளவுக்கு அதிகமா சூரிய் சக்தி வீணாக்கபடுது. 


சரி ஏன் அணு மின் நிலையம் வேணாமுன்னு சொல்லுறாங்க அதுலா என்ன பிரச்சன்னை எதுக்கு வேணாம் சொல்லுறாங்க ?


ஜப்பான்ல சுனாமி (2011) வந்து அந்த நாடு பெரிய பிரச்சனை சந்திச்சது அதுலா முக்கியமானது புகுஷிமா டைய்ச்சி(Fukushima Daiichi) அணு மின் நிலையம் மிக பெரிய அழிவ சந்திச்சது என்ன மாதிரியான்ன அழிவுனா அந்த அணு மின் நிலையம் இருந்த பகுதில விளைஞ்ச உணவு பொருட்களை எதுவும் விக்க கூடாதுன்னு தடை போட்டு இருகாங்க அந்த அளவுக்கு மிக பெரிய சேதாரம் உருவாக்கி இருக்கு ஒரு அணு மின் நிலையம். இது ஒரு உதாரணம் இன்னும் ஏகப்பட்ட அழிவுகள் உருவாக்கி இருக்கு.


இத்தனைக்கும் அந்த அணு மின் நிலையம் மிக சிறந்த, மிகவும் உறுதியான, பாதுகாப்பானது அப்படின்னு சொன்னாங்க எந்த அளவுக்கு பாதுகாப்பானதுனா நில நடுக்கம் 8 .8 /8.9 ரிக்டர் அளவு வந்தா கூட ஒன்னும் ஆகாதுன்னு சொன்னாங்க ஆனா என்ன ஆச்சு மிக பெரிய சீரழிவு அந்த நாடு சந்திச்சது




அங்க மட்டும் இல்ல இப்ப இங்க கூடங்குளத்துல அணு மின் நிலையம் கட்டுற ரஷ்ய நாட்டுலயும் இந்த மாதிரி ஒரு விபத்து 1986 ல நடந்துச்சு. அதை பற்றி இங்க படிங்க.




நிறைய பேரு கேக்கலாம் எதுல தான் ரிஸ்க் இல்ல வாழ்கையே ஒரு ரிஸ்க் தானேனு கேக்கலாம். வாழ்கைல எதுவும் நிலையானது சொல்ல முடியாது   அதுக்காக நாம்மா எல்லாம் நிமிசம் ரிஸ்க் எடுக்கறது இல்ல குறைந்த பட்சம்  நாம் துங்கும் போது நிம்மதியா துங்கனும்.


ஒரு சராசரி குடிமகன் ஒரு அரசாங்கத்துகிட்ட அடிப்படை எதிபார்ப்பு என்ன என்றால் ஒரு அடிப்படை பாதுகாப்பு தான் அதை தரவேண்டியது ஒரு அரசாங்கத்தோட கடமை மக்கள் இந்த அணு மின் நிலையங்களில் பாதுகாப்பு இல்லை என்று நினைகிறார்கள் அப்படி நினைக்கும் போது அரசாங்கம் அதை கை விட வேண்டும்.


ஜெர்மனி போன்ற நாடுகள் அந்த முடிவை எடுத்து இருக்கும் போது நமது அரசாங்கமும் எடுக்க வேண்டும் என்பது தான் என் போன்ற சராசரி குடிமகன் எண்ணம்.


கூடங்குளத்துல அணு மின் நிலையம் கட்டுறதுக்கு நம்ம நாட்டு மதிப்பில் 13,615  கோடிகள் செலவு செய்து 2000 மேகவாட்ஸ் மின்சாரம் எடுக்கறாங்க ஆனா அந்த காசில் 9 நகரத்திற்கு சூரிய ஒளி முலம் மின்சாரம் தரலாம்.


அணு மின் நிலையம் சாதக மற்றும் பாதங்களை  கிளிக் செய்து படிக்கவும்.


மிக பெரிய அளவுல பொருளாதாரரீதியா, தொழிநுட்பரீதியா வளர்ந்த நாடுகளானா ஜப்பான், ரஷ்ய இந்த மாதிரியான பேரழிவுகளை தடுக்க முடியல லஞ்ச ஊழல்கள் நிறைந்த நம்ம நாட்டுல கட்டப்படுகின்ற இந்த மாதிரியான அணு மின் நிலையங்கள் எந்த அளவுக்கு உறுதியா, பாதுகாப்பா இருக்கும் என்பது தான் என் கவலை. அது மட்டுமில்லாமல் மனித தவறுகளால் அல்லது இயற்கை சீற்றங்களால் மிக பெரிய பேரழிவுகளுக்கு வாய்ப்பு உண்டு அதில் இருந்து இப்போதைய தலைமுறை மட்டும்மில்லாமல் அடுத்த தலைமுறையும் காப்பாற்ற வேண்டும். அந்த பேரழிவு இந்த மண்ணின் வாழும் சூழலை கெடுத்து விடும்.




அடுத்த தலைமுறைக்கு நாம் நல்ல மக்கள் வாழும் சூழ்நிலை தரவேண்டும் என்பது ஒவ்வொருவரின் கடமை நம்மளுடைய இப்போதைய சந்தோசதிற்கு சுயநலத்திற்கு அடுத்த தலைமுறை வாழ்கை சூழலை அழிக்க கூடாது என்பது என் கருத்து...
  

7 comments:

  1. << ஒத்துக்கிறேன் கரண்ட் தேவை இந்த நாட்டுக்கு ஆனா அதை எடுக்கறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு உதாரனத்துக்கு சூரிய ஒளியில் இருந்து கரண்ட் எடுக்கலாம். நம்ம நாட்டுல அளவுக்கு அதிகமா சூரிய் சக்தி வீணாக்கபடுது. >> மன்னிக்கவும். உங்களுக்கு இது பற்றி அதிகம் தெரியவில்லை என்பது தெளிவாகிறது. உங்கள் கவலை நியாயமானது என்றாலும், வெறும் தகவல் ஊடகங்களைப் படித்து முடிவு எடுக்காமல், நுனிப்புல் மேயாமல், நன்கு ஆராய்ந்து எழுதவும்.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி தமிழ் பையன்...ஆனால் என்னுடைய இந்த கருத்து << ஒத்துக்கிறேன் கரண்ட் தேவை இந்த நாட்டுக்கு ஆனா அதை எடுக்கறதுக்கு எவ்வளவோ வழி இருக்கு உதாரனத்துக்கு சூரிய ஒளியில் இருந்து கரண்ட் எடுக்கலாம். நம்ம நாட்டுல அளவுக்கு அதிகமா சூரிய் சக்தி வீணாக்கபடுது. >> எப்படி தவறானது என்று தெரிவித்தால் நன்றாக இருக்கும் ஏன் என்றால் படிக்கும் நண்பர்களுக்கு உபயோகமாக இருக்கும். இந்த உலகின் மின்சார தேவைக்கு எந்த எந்த வழிகளில் மின்சாரம் உற்பத்தி செய்ய படுகிறது என்று தெரிவித்தால் நன்று அதில் அணு சக்தியின் பங்கு எவ்வளவு என்று தாங்கள் கூறினால் மிகவும் நன்றாக இருக்கும் அதில் சூரிய ஒளியின் பங்கு எவ்வளவு என்று அனைவரும் தெரிந்து கொள்ளலாம்.. சும்மா கருத்து மட்டும் தான் தெரிவிப்பிர்கள் என்றல் தாங்கள் கருத்துக்கு நன்றி :)

    ReplyDelete
  3. http://en.wikipedia.org/wiki/File:Levelized_energy_cost_chart_1,_2011_DOE_report.gif

    அணு நிலையத்தை ஒப்பிடும்போது சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதற்கு இரண்டு மடங்குக்கு மேல் செலவாகும். கரி, எரிவாயு இவை இரண்டு மட்டுமே அணு உலைகளை விட விலையில் குறைவு.

    ReplyDelete
  4. நன்றி தமிழ் பையன்... மக்கள் பதுகாப்பு மற்றும் சுற்று சுழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது எது மிகவும் விலையில் குறைவு? தங்கள் கருத்து என்ன.

    ReplyDelete
  5. தேவை இல்லாமல் பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாம். மக்கள் பதுகாப்பு மற்றும் சுற்று சுழல் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது அணு மின் உற்பத்தி சிறந்ததே. அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னது சிறந்த சான்று. அவரை விட சிறந்த சான்று எனக்குத் தேவை இல்லை. ஒரு சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக தமிழகம் இருண்ட மாநிலமாக இருக்கத் தேவை இல்லை.

    ReplyDelete
  6. ஆம், ஜப்பானில்(2011), ரஷியாவில்(1976) மின்சாரம் பெற மிக குறைந்த செலவு தான் செய்தார்கள். கண்டிப்பாக நான் மதிக்கும் அப்துல் கலாம் கூறி விட்டால் மாற்று கருத்து கூற கூடாது ஏன் என்றால் அவர் அணு அறிவியலின் கடவுள் அல்லவா...(எப்பொருள் யார் யார் வைக்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு) கூடங்குளம் அணு மின் நிலையம் முலம் பெற கூடிய மின்சாரத்தினால் தமிழகம் மின்சார தன்னிறைவு பெற்ற மாநிலமாக மாறிவிடும் ஏன் என்றால் அது உற்பத்தி செய்ய கூடிய மின்சாரம் 2000 மெகா வாட்ஸ் தற்போது நமது தேவையோ வெறும் 3000 மெகா வாட்ஸ் எதிர் காலத்தில் கூடுதல் மின்சாரம் தேவை பட்டால் கூடங்குளம் அணு மின் நிலையம் முலம் பெற்று கொள்லாம் எனேன்றால் அது 2000 மெகா வாட்ஸ் உற்பத்தி செய்கிறது அல்லவா.

    ReplyDelete
  7. இப்போது ராஜஸ்தானை விட நாங்கள்தான் அதிக அளவிலான சூரிய சக்தியை உற்பத்தி செய்கிறோம். ராஜஸ்தானுக்கு ஆண்டுக்கு 8500 மெகாவாட் மின்சாரம்தான் சூரிய சக்தி மூலம் கிடைக்கிறது. ஆனால் நாங்கள் அதை விட கூடுதலாக 4000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறோம். 2012 இறுதியில் இது 7000 மெகாவாட்டாக உயரும்.

    மின்தடை என்று வேறு மாநிலத்தவர் யாராவது சொன்னால் குஜராத் மக்களுக்கு பெரும் ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் அவர்கள் ஒருமுறை கூட மின்சாரம் நின்று பார்த்ததில்லை.
    வலிமையான, பொலிவான இந்தியாவாக நமது நாடு மாற வேண்டும் என்றார் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி.

    ReplyDelete