Search This Blog

Sunday, January 22, 2012

ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்



வாழ்கையில் எத்தனையோ பேரை தினம் தினம் சந்திக்கிறோம், பழகுகிறோம், சேர்ந்து பொழுதை கழிக்கிறோம், ஏன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை கூட வேலை பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாம் திரும்பி பார்த்தல் நம்முடன் பழகிய அதனை பேரையும் ஞாபகத்துல வச்சிக்க மாட்டோம் ஒரு குறிப்பிட்ட சில பேர் மட்டுமே நாம் நினைவில் இருப்பர். நாம் கஷ்டபடும் போது, சந்தோஷபடும்போது அந்த சிலரை மிஸ் பண்ணுவோம். அப்படி தங்களை  ஒருவற்கு ஒருவர் மிஸ் பண்ணும் மூன்று நண்பர்களை பற்றிய கதை தான் நண்பன்.

ஒரு படத்தை பார்க்கும் போது நம்மை அந்த படத்துல ஒன்றி போய் பார்க்க செய்தால் அதுவே அந்த படத்தின் வெற்றி. அந்த வகையில் நண்பன் படம் என்னை அவனுடன் ஒன்றி போக செய்து என்னை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது  

நல்ல வேலை நான் இந்த படத்தின் ஒரிஜினலான 3 IDIOTS பாக்கலை அதனால படத்தை நல்ல என்ஜாய் பண்ணி பார்க்க முடிஞ்சது இல்லனா தேவை இல்லாம ஒரிஜினல் படத்துல நடிசுவங்களோட கம்பர் பண்ணி பார்போம்.

படத்தில் காட்டப்படும் நான்கு மாணவ கதாபாத்திரங்கள் நம்முடைய கல்லுரி காலத்தில் நிறைய பார்த்து இருப்போம் குறிப்பாக அந்த சத்யன் பன்ன ஸ்ரீ  வத்ஷவ் கேரக்டர் இன்று நம்மிடையே நிறைய பேர் உள்ளனர். அந்த கேரக்டர் ஒரு சுயநலவாதி தான் முன்னேறுவதற்காக மற்றவர்களை முன்னேற விடாமல் கெடுத்து தான் முன்னேற நினைக்கும் கேரக்டர் அதே போல் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் பச்சோந்திதனமான கேரக்டர். சத்யன் மிக சிறப்பா செய்து இருக்கிறார் அவருடைய பாடி லாங்குவேஜ் எல்லாம் சிறப்பா இருக்கும் கண்டிப்பா இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக் தான் ஆனா இதுக்கு அப்பறம் எப்படி எடுத்து போக போறாரு பொறுத்து  தான் அவருடைய career இருக்கு.  


இன்றைய   நடைமுறை வாழ்கையில் நிறைய பேர் போட்டி போட்டு முன்னேறுவதில்லை ஒன்று நன்றாக ஜால்ரா அடித்து அல்லது மற்றவர்களின் முன்னேறத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தான் முன்னேறுகின்றனர் இது போன்ற கேரக்டர் தான் சத்யனுடையது இதை படத்தில் சத்யன் examku தயாராகும் முறையை வைத்து புரிய வைத்து இருப்பர் டைரக்டர்.

ஜீவா செய்த சேவற்கொடி செந்தில் கேரக்டர் நம்மில் பல பேரிடம் காணலாம். அது பயம், தைரியமின்மை அந்த கேரக்டரை அற்புதமாக செய்து இருப்பார். படத்தில் அந்த கேரக்டரை பார்க்கும் போது நான் கல்லூரி காலங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயந்தது, தயங்கியது மற்றும் சில விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.


கல்லூரி நாட்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம் வித்தியாசமான, பிரபலமான மாணவன் கூட ஒரு ப்ரெண்டு இருப்பான் அவர்களிடையே ஓர் ஆரோக்கியமான அத்மார்தனமான நட்பு இருக்கும் அது போல் ஓர் நண்பனாக ஸ்ரீ காந்த் செய்து இருப்பர். வெங்கட் என்ற அந்த கேரக்டர் மிக நன்றாக இருந்தது.

விஜய் பண்ணிய பாரி என்ற அந்த கேரக்டர் மிக சிறந்த பாத்திர படைப்பு இந்த மாதிரியான நண்பன் நம் நட்பு வட்டத்தில் உண்டு. அவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் எதிர் மறையாக பேச மாட்டார்கள்  ஆனால் இந்த படத்தில் காட்டியதை போன்று அந்த நண்பர்கள் எல்லா விஷயத்திலும் சிறந்தவராக இருப்பது மிக சிலர்தான். 



படத்தோட மற்றொரு முக்கிய பலம் சத்யராஜ் பண்ணிய அந்த VIRUS கேரக்டர் தான் அவரை பார்க்கும் போது என் கல்லூரி பேரசிரியர் "ஆரோக்கியராஜ்" சார் தான் ஆனா VIRUS மாதிரி இல்ல ஓரளவு கண்டிப்பான ஆசிரியர். இன்று நான் பணிபுரியும் வேலைக்கான தன்னம்பிகை விதையை அவர்தான் விதைத்தார். உண்மையில் சத்யராஜை தவிர அந்த கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக தமிழில் செய்ய முடியாது. 

இலியானா இலியானாவின் இடுப்பளவுக்கு தான் நடித்து இருந்தார்.

இந்த படம் என்னை மிக பிடிக்க காரணமே படத்தின் சில சம்பவங்கள் என்னுடைய கல்லூரி மற்றும் அதை சார்ந்த நாட்களுக்கு கொண்டு சென்றது.

உதாரணத்திற்கு இலியானாவின் அறிமுக காட்சி மூன்று நண்பர்களும் திருட்டுதனமா கல்யாண விருந்திற்கு செல்லும் காட்சி. நான் எனது நண்பர்களுடன் வேறு ஊர்க்கு சென்று அறிமுகமில்ல, யாரென்று தெரியாத திருமணத்திற்கு சென்று வயிறு நிறம்ப சாபிட்டோம் நல்ல வேளை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

நம்முடைய தேவை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையே படத்தில் கல்யாண காட்சியில் கார் பாட்டரி வைத்து inverter உருவாக்குவதை பற்றி கூறி இருப்பார் அந்த ஐடியாவிற்கு மற்றொரு காட்சில் வடிவம் கொடுத்து இறுதியில் அதனை பிரசவ காட்சியில் கொண்டு வண்டு சேர்த்தது கதாசிரியரின் திறமை.

படத்துல பாரட்ட வேண்டிய விஷயம் கேமரா ஒரே வார்த்தைல  சொல்லணுமுன  "Superb".


பாடல்கள் சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே ஹிட் அஸ்க்கு அஸ்க்கு, நல்ல நண்பன் தேவை , கண் முன்னே போன்ற பாடல்கள் மனதை வருடும் ரகம். இருக்கான இடுப்பு இருக்கான பாடல் விஜய் ரசிகர்களுக்காக. 


குறையென்று பார்த்தல் எல்லா படத்திலும் குறைகளை பார்க்கலாம் ஆனால் நல்ல படங்களில் அதை பெரிது படுத்த கூடாது அதனால் எனக்கு சொல்ல மனம்  வரவில்லை. 

மனதை நெகிழ செய்த காட்சிகள்
  1. ஸ்ரீ காந்த் தான் தந்தையிடம் பேசும் காட்சி.
  2. ஜீவாவின் interview காட்சி 
  3. ஜீவாவின் தற்கொலை செய்ய முயன்று ஆஸ்பத்திரியில் இருக்கும் காட்சிகள் 
  4. அனுசுயாவின் பிரசவ காட்சியில் சத்யராஜ் நடிப்பு   

பிடித்த பாத்திரயமைப்பு :

விஜயின் கேரக்டர் சிறப்பாக செய்யபட்டிருக்கிறது . ஒரு காட்சியில் நண்பர்கள் விஜயின் காதலை இலியானாவிடம் அவர் காதலை தெரிவித்தால் தங்களை மாற்றி கொள்வதாக சொல்லுவார்கள். கதைப்படி அந்த கேரக்டர் தன் காதலை தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்  ஆனால் நண்பர்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்  தன் காதலை தெரிவிப்பார் படத்தில் இந்த காட்சி இயல்பாக தான் தெரியும் கதைப்போக்கில் அந்த பத்திரத்தை பற்றி அறியும் போது தான் தன் சூழ்நிலையை  விட தன் நண்பர்கள் தான் முக்கியம் என்று  முடிவெடுக்கும் அந்த பாத்திரத்தின் வலிமையை மற்றும்  நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடியும்.

மொத்தத்தில் ஷங்கர் ரசிக்கும்படியான நண்பனை கொடுத்து இருக்கிறார்.


Monday, January 16, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

சென்னைல வாகன ஓட்டிகளுக்கு பொங்கல் மாதிரி பண்டிகைகள் வந்தாவே கொண்டடமா தான் இருக்கும் என்ன அப்பதான் ட்ராபிக் இல்லாத சென்னைய பார்க்க முடியும்.

இன்னைக்கு ஆபீஸ்க்கு 20 நிமிசத்துல வந்து சேர்ந்துவிட்டேன் போரூர் வழியா கிண்டி வர வேண்டும் என்றால் நாக்கு தள்ளிவிடும் அந்த அளவுக்கு நெரிசலான ஒரு போக்குவரத்து சாலை அது ஆனால் இன்று சுத்தமாக ட்ராபிக்கே இல்லை ஏன் போக்குவரத்து போலிசார்  கூட இல்லை. இன்று வண்டி ஓட்டுவதற்கு சந்தோசமா இருந்தது.

ஆனால் இது மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் தமிழத்தில் உள்ள எல்லா மக்களும் சென்னை நோக்கி படை எடுக்கிறார்கள் அதனால் சென்னை மக்கள் தொகை அதிகரித்து கொண்டே இருக்கிறது இதை நான் எதிர்க்க வில்லை.

நமது அரசாங்கம் இப்போதே இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ன மாதிரியான நடவடிக்கை என்றால் நமது தொழிற்சாலைகள், சாப்ட்வேர் கம்பெனீஸ் மற்றும் இதர நிறுவனங்களையும் தமிழகத்தின் எல்லா பகுதிகளில் அரபிக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மக்கள் வேலை வாய்ப்புக்காக தலைநகரை நோக்கி வருவதை தடுக்க முடியும்.

 அதற்கு தேவையான கட்டுமானங்களை ,கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமை இல்லை என்றால் சென்னை ட்ராபிக்கில் மூச்சு திணற வேண்டியது தான்.

சென்னை புத்தக காட்சி 

சென்னைய பொறுத்த வரைக்கும் ஜனவரி மாதம் என்றால் இரண்டு சந்தோஷமான விஷயங்கள் சென்னை வாசிகளுக்கு 1) பொங்கல் நாட்களில் ட்ராபிக் இல்லா சென்னை 2) சென்னை புத்தக காட்சி

இந்த முறை புத்தக காட்சிக்கு போகி அன்று தான் போக முடிந்தது. டூ வீலர் பார்கிங்க்கு 10 ரூபாய் வாங்கினார்கள் 10  ரூபாய் எல்லாம் அதிகம் என்ன பண்ணறது வாங்கி தான் ஆகனும் .


நான் இந்த முறை அதிகமா புத்தகங்களை வாங்கவில்லை அளவாக தான் புத்தகங்களை வாங்கினேன்.

Stallகளுக்கு போகும் பாதைகளுக்கு புத்தக உலகை சேர்ந்த சாதனையாளர்களின் பெயரை சூட்டி இருந்தனர் நன்றாக இருந்தது.

பொதுவாக சட்டைகளில் பனியன்களில்(T-Shirt) ஆங்கிலத்தில் வாக்கியங்கள் பயன்படுத்துவர் ஆனால் புத்தக காட்சியில் தமிழ் வாக்கியங்கள் பயன் படுத்திய பனியன்கள் (T-Shirt) இருந்தது என்னுடைய சைஸ் XL இல்லாததால் வாங்க முடியவில்லை நான் மிக ரசித்த (T-Shirt) கீழே.



வீழ்வது இழிவாகாவது வீழ்ந்து கிடப்பது இழிவு .

ஞானி மற்றும் மணுயுஷபுத்திரன் ரசிகர்களுடன் உரையாடி கொண்டிருந்தனர்.


சென்னை புத்தக காட்சியில் நான் மிகவும் பிரமித்தது காஞ்சி மகா பெரியவர் சிலை தான் அந்த சிற்பத்தை பார்க்கும் போது எனக்கு உயிருள்ள ஒருவர் தான் அமர்ந்து இருபது போல் இருந்தது.


 


பொதுவா நான் புத்தக காட்சி போகும் போது எல்லாம் என் மனசுல தோணும் இதை ஏன் Chennai Trade Centre(CTC )ல வைக்க கூடாது. CTC மாதிரி எடத்துல வைச்சா ரொம்ப நல்ல இருக்கும்.
ஏன் என்றால் அந்த இடம் ரொம்ப கிளீன்னா இருக்கும் பைக் மற்றும் கார் பார்கிங் போன்ற வசதி நன்றாக இருக்கு.


வெளிபுறமும் ரொம்ப நல்ல இருக்கும். மிக காற்றோட்டமான அழகிய இடம் CTC  ஆனா காரணம் தெரியவில்லை ஏன் அந்த இடத்தை இவர்கள் பயன்படுத்தவில்லை என்று.


அநியாயக் கொள்ளை :


சென்னையில் பொங்கல் முன் தினத்தன்று அநியாயக் கொள்ளை அடித்தனர் கரும்பு விற்பனை என்ற பெயரில் ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருந்தது சென்னை. ஆனால் புது கோட்டையில் ஒரு கட்டு கரும்பு 100 ரூபாய். இதை தடுப்பதற்கு அதிகாரிகளுக்கு, அரசுக்கு தைரியம் இல்லை பாவம் சென்னை மக்கள்.


நல்ல கேள்வி:

உத்தர பிரதேசத்தில் இருக்கும் யானை சிலைகளுக்கு திரை போட்டீர்கள், அடுத்து லாந்தர் விளக்குகளை உடைப்பீர்களா என்று ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தேர்தல் ஆணையத்தை கேட்டுள்ளார்.

நல்ல கொள்கை:

நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் கிடையாது. அதனால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம். காலத்திற்கேற்ப அரசியல் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார் தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்.


இன்றைய ரவுசு :

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரபை கொல்பவருக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என்று ஜம்ஹூரி வத்தன் கட்சி அறிவித்துள்ளது

சென்னை எழிலகத்தில் பயங்கர தீ: கட்டடம் இடிந்து தீயணைப்பு வீரர் பலி

காணும் பொங்கல்: மெரீனாவில் குளிக்க தடை-போலீசார் குவிப்பு

பாமகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் பொங்கல் திருநாள் அன்று தமிழர் வாழ்வுரிமை கட்சி என்ற புதிய கட்சியைத் துவங்கியுள்ளார்.

மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் வருவாய் பிரிவு கம்ப்யூட்டர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திடீர் என்று மாயமானது. இது குறித்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

நான் ரசித்தது:



Saturday, January 7, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)


வாழ்த்து:

தமிழ் திரையுலகின் மிகச் சிறந்த எழுத்தாளர், திரைக்கதை மன்னன் எனப் புகழப்படும் கே பாக்யராஜுக்கு இன்று பிறந்த நாள்.



திரு கே பாக்யராஜுக்கு இனிய பிறந்த நாள் மற்றும் புத்தாண்டு நல வாழ்த்துக்கள். 

ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது: அதிமுகவின் ஆட்டம் ஆரம்பம் ஆகிவிட்டது வெற்றிகரமாக இன்று முதல் விக்கட்டாக நக்கீரன் அலுவலகத்தை தாக்கி உள்ளனர்.

சட்டம் ஒழுங்கு காப்பாற்றபடும் சொன்ன ஜெயலலிதா யாருகிட்ட இருந்து காப்பாற்றபடும் என்று சொல்லவில்லை ஏன் என்றால் இன்று அதிமுகவினர் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து கொண்டு காவல்துறையினரை வைத்து கொண்டு நக்கீரன் அலுவலகத்தை நாள் முழுக்க தாக்கி உள்ளனர்.

அதை பற்றி இங்க படியுங்கள்


தன் கட்சியினரை தன் கட்டுப்பாட்டில் வைக்க முடியவில்லை இவர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற போகிறார் நல்ல காமெடி.

புத்தாண்டில் அதிமுக அட்டகாசமாக ஆட்டத்தை ஆரம்பித்து வைத்து உள்ளது.

கடலூர் மாவட்டத்தில், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் புனரமைக்க, 15 அமைச்சர்கள் இருந்தும் மின் வினியோகம் சீராகாவில்லை.

அடுத்த சூப்பர் மேட்டர்: காஷ்மீர் மாநிலத்தில் மின்சாரரம் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உயிரோட இருந்தா தானே தண்ணி, மின்சாரம் etc ., கேட்பாங்கன்னு சுடுறாங்க போல இருக்கு.

மொத்தல புத்தாண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அட்டகாசமாக ஆரம்பித்து உள்ளது.

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !!!!

சாலை பாதுகாப்பு வாரம் ஜன., 1 முதல் 7ம் தேதி வரை:

எத்தனை பேருக்கு இது தெரியும் என்று தெரியவில்லை இது பெரிய விஷயமில்லை ஆனால் எத்தனை பேருக்கு சாலை பாதுகாப்பு பற்றி தெரியும் என்று தெரியவில்லை.


இதுவரை சென்னையில் மட்டும் 10,297 விபத்துகள் நடந்து உள்ளது அதில் 1504 பேர் விபத்தில் இறந்து உள்ளனர் 8198 பேர் காயமடைந்து உள்ளனர்.

இது மிகவும் வேதனையான விஷயம். ஆனால் மிகவும் கொடுமையான விஷயம் என்னவென்றால் அரசு போக்குவரத்து ஊழியர்களே சாலை விதிகளை கடைபிடிக்க மறக்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் பிட் அடிப்பவர்களை பிடிக்க பறக்கும் படை அமைப்பது போல் அரசு போக்குவரத்து ஊழியர்களை கண்காணிக்க ஒரு படை அமைத்து அவர்களை கண்கானித்தால் ஓரளவு விபத்துகளை தடுக்கலாம்.

எல்லாத்தையும் விட ஒவ்வொரு மனிதனும் தனிப்பட்ட முறையில் தன் மீதும், தன் குடும்பதின் மீதும் அக்கறை வேண்டும். சாலைகள் போர்க்களம் அல்ல என்பதையும் உணர வேண்டும்.

ஏன் என்றால் "உங்கள் குடும்பம் உங்களையே நம்பி உள்ளது".

சாலைகளில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை.


 

இந்த பதிவை போடும் போது படித்தது

"காஞ்சிபுரத்தில் சாலையோரம் நின்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதியதில், காரில் பயணித்த 6 வயது சிறுமி உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியாகினர்."

சந்தேகம்:

அத்வானி ஜெயலலிதா சந்திக்க காத்துட்டு இருந்ததுக்கும், selective amnesia தனக்கு உண்டு என்று எல்லாம் ஜெயலலிதா சொன்னதற்கும் சசிகலாத்தான் காரணமா? இன்று நக்கீரன் அலுவலகம் தாக்க பட்டற்கும் சசிகலா தான் காரணம் என்று சொல்லுவார்களா?


இன்றைய ரவுசு:  

நக்கீரன் ஆபீஸ் மீது அ.தி.மு.க.,வினர் தாக்குதல்.

வேளச்சேரி எம்எல்ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார்.

நக்கீரன் பத்திரிகை எரிப்பு மற்றும் அலுவலகம் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தியதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்தில் 19 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.

‘கோமா’ வில் இருந்த சுக்ராம் ஆம்புலன்சில் வந்தார் – திகாருக்கு செல்ல உத்தரவு.