Search This Blog

Tuesday, July 24, 2012

தெரிந்து கொள்ளுங்கள்

பூலித்தேவன் !


பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வெள்ளையர்களின் வரி வசூல் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிய தென்னிந்தியப் பாளையக்காரர்களின் போராட்டத்திற்கு, நெற்கட்டுஞ்செவல் பாளையக்காரரான பூலித்தேவன், 1750களில் நடத்திய போராட்டம் முன்னோடியாக இருந்திருக்கிறது. சங்கரன் கோவில் அருகே இருக்கும் இந்தப் பாளையம் அன்று நெல்லைச் சீமையின் போராட்ட மையமாக இருந்தது.

நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் மதுரையை ஆள்வதற்குப் பல்வேறு மன்னர்கள் முயன்றனர். மதுரையைக் கைப்பற்றுவதன் மூலம் அதன் கீழ் இருந்த பாளையங்களின் பெரும் வரிவசூல் தொகையைக் குறி வைத்தே பலரும் போட்டியிட்டனர். “தனக்கு வரவேண்டிய கப்பம் மற்றவர்களுக்குப் போவதா?” என்று ஆத்திரமடைந்த ஆற்காட்டு நவாப், மதுரையைக் கைப்பற்ற தொடர்ந்து படையெடுத்தான். அதற்கு ஆங்கிலேயர்களின் இராணுவத்தையும் பயன்படுத்திக்கொண்டான். 1755இல் ஆற்காட்டு நவாபின் அண்ணன் மாபூஸ்கான் தலைமையில் கர்னல் கீரானின் ஆங்கிலேயப் படையும், கான்சாகிப் தலைமையில் உள்நாட்டுச் சிப்பாய்களடங்கிய படையும் பாளையக்காரர்களிடம் வரிவசூல் செய்யப் புறப்பட்டது.

எல்லாப் பாளையங்களையும் பணியவைத்த இந்தப்படை, பூலித் தேவனை மட்டும் வெற்றிகொள்ள முடியவில்லை. இந்தப் போருக்குப் பின்னர்தான் பூலித்தேவனது புகழ் பரவத்தொடங்கிற்று. வெற்றியடைந்த கையோடு ஏனையப் பாளையக்காரர்களை ஒன்றிணைக்க முயல்கிறார் பூலித்தேவன். பலர் பயந்து ஒதுங்க சிலர் மட்டும் ஆதரிக்கின்றனர்.


                                   

திருவிதாங்கூர் மன்னன் ஆரம்பத்தில் அவனது சுயநலத்திற்காக பூலித்தேவனை ஆதரித்து விட்டுப் பின் கம்பெனியை ஆதரிக்கின்றான். இத்தகைய சூழ்நிலையில் பூலித்தேவன் ஹைதர் அலியின் உதவியையும் கேட்டிருக்கிறார். வேறு போர் முனைகளில் வெள்ளையருடன் மோதிக் கொண்டிருந்ததால் ஹைதராலும் உதவ முடியவில்லை.

வெள்ளையரின் துப்பாக்கிப் படைகளை முறியடித்த பூலித்தேவனின் மரபு ரீதியான ஆயுதங்கள்
இந்நிலையில் நவீன ஆயுதங்கள் ஏதுமின்றி மரபு ரீதியான ஆயுதங்களை வைத்தே வீரத்துடன் போரிட்டார் பூலித்தேவன். தனது திறமையால் வெள்ளையர்களிடம் தலைமைத் தளபதி பொறுப்பேற்றிருந்தவனும், போர் வியூகத்திற்கும், கொடூரமான போர் முறைக்கும் பெயர் பெற்றவனுமாகிய கான்சாகிபுவால் கூட பூலித்தேவனை ஆரம்பத்தில் வெல்லமுடியவில்லை. சுமார் 10 ஆண்டுகள் போராடிய பூலித்தேவன், 1760 – 61ஆம் ஆண்டுகளில் தோல்வியுற்றுத் தலைமறைவாகிறார். அதற்குப் பின் அவரைப் பற்றிய செய்திகளில்லை. பூலித்தேவனது காலம் முடிந்த பிறகுதான் காலனியாதிக்க எதிர்ப்பு தென்னகத்தில் பரவலாகக் கருக்கொள்ளத் தொடங்குகிறது.

அதேநேரத்தில், ஆற்காட்டு நவாப்பையும் அவனுடைய கூலிப் படையாக வந்த கம்பெனியின் படைகளையும் எதிர்த்துப் போட்ட அவரது வீரம் பின்னாளைய போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் முன்னுதாரணமாகியது.

பூலித்தேவனது போராட்ட வரலாறு இன்றைக்கும் அப்பகுதி மக்களிடையே கதைப்பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. ஒண்டிவீரன், வெண்ணிக்காலாடி முதலான தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த தளபதிகள், பூலித்தேவனுக்காக வீரத்துடன் போரிட்டு மாண்டதை அப்பாடல்களின் மூலம் அறிகிறோம். பொது எதிரிக்கு எதிராக சாதிய வேறுபாடின்றி அணிதிரளும் போக்கு, அன்றைக்கு உருவெடுத்திருந்ததையும் நாம் அறிய முடிகிறது.

Sunday, March 18, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

ஓர் ஆட்சி ஓர் இடை தேர்தல்

ஒரு ஆட்சியில் இடை தேர்தல் வருகிறது என்றல்  ஒரு நல  ஆட்சியாளர்களுக்கு   கொண்டாட்டமாக இருக்கும் ஏன் என்றால் அப்போது தான் மக்கள் தங்கள் ஆட்சிக்கு கொடுக்கும் நல் மதிப்பெண் என்னவென்று ஆட்சியாளர்களுக்கு தெரிய வரும்.

இப்படி எல்லாம் நம்ம ஆளுங்க நினைக்கராங்கானு தப்பு தப்பா நினைச்சிடாதிங்க ஏன்ணா நம்ம ஆளுங்க அதை ஒரு கவுர பிரச்சனையா தான் நினைக்கறாங்க இல்லனா ஒரு இடை தேர்தலுக்கு 32 அமைச்சர்கள், 154 எம் எல் எ க்கள்,  30க்கும் மேற்பட்ட மாவட்ட செயலளர்கள்,வட்டம், ஒன்றியம் மற்றும் அவர்கள் ஆதரவாளர்கள் எல்லாம் சேர்த்த ஒரு ஆயிரம் பேருக்கு மேல வரும் இது ஆளும் கட்சி இது போல எதிர் கட்சி, தி மூ க அப்புறம் ம தி மூ க இவங்க எல்லாம் சேர்த்த ஒரு ஐயாயிரம் பேரு இருப்பாங்க எல்லாம் எதுக்கு ஒரு இடை தேர்தலுக்காக.


உண்மையில் ஒரு நல்ல கட்சி என்ன பண்ணனும் ஆளும் கட்சியா இருந்த வேட்பாளார அறிவிச்சிட்டு அவங்கள வேலைய பார்க்க சொல்லிவிட்டு இவங்க மக்கள் பணியை தானே செய்யணும். ஆனா என்ன நடக்குது இவங்க மக்கள் பணியை செய்யல அதை விட்டுட்டு ஒரு இடை தேர்தலுக்கு இவ்வளவு  ஆர்ப்பாட்டம் தேவையா ?

தானே புயல் வந்து பாதிக்க பட்ட கூட இவ்வளவு பேரு ஜெயலலிதா அனுப்பி வைக்கல இப்படி அனுப்பி இருந்த சீக்கிரம் கடலூர் மக்கள் புயல் பாதிப்புல  இருந்து மீண்டு இருப்பாங்க ஆனா ஜெயலலிதாவிற்கு அது கவுர கொறைச்சலா தெரியல இது.

வர மே மாதம் வந்த அ தி மு க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆக போகிறது.
பேருந்து கட்டணம் உயர்வு, மக்கள் உபயோக பொருட்கள் விலை உயர்வு,தானே புயல் நிவாரண பாதிப்பு மற்றும் மின்சார பிரச்னை இவ்வளவு பிரச்சனை இருக்கு ஆனா ஜெயலலிதாவிற்கு பழி வாங்கவே நேரம் சரியாய் இருக்கு.

ஜெயலலிதா இந்த இடை தேர்தலை சந்திக்க பயப்படுகிறார் எனேன்றால்
ஜெயலலிதாவின் ஆட்சியின் மீது அவர்களுக்கே நம்பிகை இல்லை. இது எதை காட்டுகிறது என்றால் அவர்களின் திராணி குறைந்து விட்டதை!!! அவர் எந்த தைரியத்தில் சவால் விட்டார் என்று தெரிய வில்லை ஒரு வேளை   அவர்கள் ஆளும் கட்சி என்ற தைரியதிலோ?


ஆனால் உண்மையில் மக்கள் அவர் மீது வைத்த நம்பிகையை கெடுத்து விட்டார் என்பது உண்மை. பணம் குடுத்து, ஆளும் கட்சி என்ற அதிகாரம் கொண்டு, அதிகார துஷ் பிரயோகத்தால் பெரும் வெற்றி உண்மையான வெற்றி இல்லை என்பது தான் உண்மை.


ஒரு விடியல்:


உண்மையில் வை.கோ தமிழக அரசியலில் ஒரு மறுமலர்ச்சியை தான் உருவாக்கிறார்.  பண பலம் ,ஆட்பலம், அதிகார பலம் என்று கொண்ட கட்சிளுக்கு மத்தியில் உண்மையான தொண்டர்களை கொண்டு தன் கொள்கைகளை மட்டும் கொண்டு ஒட்டு வேட்டையாடி வருகிறார்.

இந்த தேர்தலில் இவர் கட்சி தோற்றால் கூட அது தோல்வி இல்லை இவர் பெறும் ஒவ்வெரு வாக்கும் இவரின் கட்சின் எதிர்காலத்திற்கு கிடைக்கும் நம்பிக்கை விதைகள்.

தலைமை என்னதான் நல்லா இருந்தாலும் அடிமட்ட தொண்டன் வரை எல்லாரும் நல்லா இருந்த தான் கட்சி வளர்ச்சியடையும்.
எனக்கு தெரிந்த ஒரு ம தி மு க தொண்டர் சாதாரன கவுன்சிலரா தன் அரசியல் வாழ்கைய ஆரம்பிச்சார் இன்னைக்கு அவர் ஒரு பஞ்சாயத்தின் துணை தலைவர் வரை வளர்ந்து உள்ளார்.

இது பாரட்ட வேண்டிய விஷயம் தான் ஒழுங்காக வந்து இருந்தால் ஆனால் வளர்ந்த விதமே வேறு. நாளை ஒரு வேலை ம தி மு க ஆட்சிக்கு வந்தால் அவர் கட்சியினர் இந்த மாதிரி ஊழல் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்.

வை கோ இப்போதே கட்சியில் களை எடுத்தால் கட்சிக்கு நல்லது.

சபாஷ் சச்சின்:

தனது சதத்தில் நூறாவது சதத்தை அடைந்து விட்டார். அவர் மென்மேலும் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்று ஆண்டவனை பிராதிப்போம்.


சச்சின் சதம் அடித்து இந்திய அணி தோற்று விட்டால் சிலர் சச்சினை குறை சொல்லுவது ஏன் என்று தெரியவில்லை. போன மட்ச்ல சச்சின் சதம் அடித்தும் இந்திய அணி தோற்று விட்டது கேட்டால் நாம் 20 குறைவாக எடுத்து விட்டோம் என்று அது சச்சினால தான் நாம் எடுக்க முடியாம போய் விட்டது சொல்லுறாங்க.


ஆனா உண்மையில் என்ன நடந்ததுனா நம்ம பௌலர்கள் நல்லா பௌலிங் போடலை அதனால தான் நாம் தோத்தோம்.


இத்தனைக்கும் பங்களாதேஷ் பாகிஸ்தான் கிட்ட இத வீட கம்மியான ஸ்கோர் எடுக்க முடியாம தோத்துட்டாங்க. பாகிஸ்தான் எடுத்தது 262  நாம எடுத்தது 289 பங்களாதேஷ் நம்ம ஸ்கோர் சேஸ் பண்ணி எடுத்துட்டாங்க ஆனா பாகிஸ்தான் கிட்ட தோத்துட்டாங்க இதை கேட்ட எவனும் பதில்  சொல்ல மாட்டாங்க.

ஒன்னு மட்டும் நிச்சயம் நாம 500௦ ரன் அடிச்சா கூட தோத்துடுவோம் ஏன்னா நம்ம பௌலிங் அவ்வளவு ஸ்ட்ரோங்!!!

நண்பர் ஒரு அறிமுகம்:

Hi Raja ... Keep writing more.. I love your writeup's. But I'm not good at writing in Tamil. Keep going.

இப்படி சொன்னது நமது நண்பர் Vish முழு பேர் தெரியல இது நமது நண்பரின் முதல் கமெண்ட் அதுக்கு அப்பறம் நிறைய கமெண்ட் போட்டு இருக்கிறார் இவரின் கமெண்ட் தான் என்னை உற்சாகபடுத்தி, ஊக்கபடுத்தி  உள்ளது. 
நன்றி Vish .   

பாராட்டு எவ்வளவு முக்கியம் என்பதை உங்கள் கமெண்ட் முலம் நான் அறிந்து கொண்டேன். ஏனெனில் வேலை பளுவின் காரணமாக தொடர்ந்து எழுத முடியவில்லை ஆனால் உங்கள் பாராட்டு என்னை தொடர வைத்துள்ளது மீண்டும் நன்றி.

ஒரு வாரம் நண்பனுடன் வட நாட்டிற்கு செல்கிறேன் ஆகையால் ஒரு வாரத்திற்கு நமது நண்பர்களை சந்திக்க முடியாது.

அன்புடன் 
ராஜா
       

Saturday, March 17, 2012

இந்தியராக இருக்க விடுங்கள் - தமிழருவி மணியன்

இந்த கட்டுரை ஜூனியர் விகடனில் படித்தேன் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோன்றியது அதனால் உங்களுக்காக









 

Monday, March 12, 2012

என்ன செய்ய போகிறோம் நாம் ?


நாம் ஒரு முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறோம் ஆனால் அதை பற்றி நாம் எல்லோரும் உணர்ந்தோமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நாம் நாம் என்று குறிப்பிடுவது தமிழர்களை. 

சரி தமிழர்கள் என்ன முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறார்கள் என்று நினைகின்றீர்களா? அது ஒன்றும் இல்லை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய ஆதரிக்க வேண்டும் அதற்கு நாம் ஒரு குரலில் குரல் கொடுத்து இந்திய அரசை ஆதரிக்க வைக்க வேண்டும்.

நாம் இப்போது இந்த வாய்ப்பை தவற விட்டால் பின் எப்போதும் இலங்கை தண்டிக்க நமக்கு வாய்ப்பு கிடைக்காது.

உண்மையில் இப்போது என்ன நடந்து இருக்க வேண்டும். நாம் நம் மக்களுடன் வீதியில் இறங்கி இருக்க வேண்டும் ஏன் என்றால் இன்னும் இந்திய அரசு தீர்மானத்தை பற்றி வெளிப்டையாக ஒரு கருத்தும் கூறவில்லை இப்போது இந்திய அரசு தீர்மானத்தை ஆதரிக்க வில்லை என்றால் பின் எப்போதும் இலங்கையை போர் குற்றத்திற்கு தண்டிக்க முடியாமல் போய்விடுமோ என்று அச்ச படுகிறேன்.

இந்திய அரசு பல முறை இந்த மாதிரி தமிழர்களுக்கு எதிரான பிரச்சனையில் காலை வாரி உள்ளது  அதனால் நாம் இப்பொழுது விழித்து எழுந்து வீதியில் இறங்கி போராடி இந்திய அரசை இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வைக்க வேண்டும்.

சேனல் 4 இருக்கும் அக்கரையில் நான்கில் 1 பங்கு இருக்குமா என்பது சந்தேகமே? உண்மையில் நாம் எப்போதே பொங்கி இருக்க வேண்டும் ஆனால் நாம் நம் உணர்வுகளை விற்று விட்டோமோ என்று தோன்றுகிறது.

கீழ் காணும் வீடியோ காட்சிகளை காணும் போது கல் நெஞ்சமும் கரைந்து போகும் ஆனால் நம் நெஞ்சம் கரையவில்லை இவர்களுக்காக குரல் குடுக்க மனம் வரவில்லை என்பதே வேதனை. 





இந்த வீடியோ காட்சிகளில் கொல்லப்பட்டுள்ள பலரும் கண்களை மூடியும், கைகள் கட்டப்பட்ட நிலையிலும், ஆடைகளின்றியும் காணப்படுகின்றனர். இதை வைத்துப் பார்க்கும்போது பிடிபட்ட அத்தனை தமிழர்களையும் திட்டமிட்டு படுகொலை செய்து இருக்கிறார்கள். 

இவர்களுக்கு தண்டனை வேண்டாமா? இவர்களும் ஒரு வகையில் நம் உறவுகள் தான் அதை நாம் ஏன் உணர மறுக்கிறோம் என்று தெரியவில்லை.  

இப்போது பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்ட வீடியோ வெளியிட போகிறதாம்  சேனல் 4! மிக மிக நெருக்கத்தில் வைத்து பாலச்சந்திரனை சிறுவன் என்றும் பாராமல் கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர் இலங்கை வீரர்கள்.
அது மட்டுமில்லாமல் சேனல் 4 வசம் பிரபாகரன் குறித்த ’பரபரப்பான’ வீடியோவும் உள்ளதாம். 



இந்த குற்றவாளிகளுக்கு நாம் இப்பொழுது தண்டனை வாங்கி தராவிட்டால் இந்த உலகம் உள்ள வரை தமிழர்களை  தூற்றும்  இந்த போர் குற்றவாளிகளுக்கும் நமக்கும் வேற்றுமை இல்லை என்று தூற்றும்.
 
வீழ்வது இழிவாகாவது வீழ்ந்து கிடப்பது இழிவு அதனால் இப்பொழுது நம் ஒற்றுமையை காட்ட தவறி விட்டால் பின் எப்பொழுதும் எந்த பிரச்சனைகளுக்கும் இந்திய அரசு நமக்கு துணை இருக்காது இதை நாம் உணர வேண்டும்.

தயவு செய்து சொல்லுங்கள் என்ன செய்ய போகிறோம் நாம்?    


Friday, February 10, 2012

நாம் ஏமாறப்போகின்றோமா?

கூடங்குளம் அணு உலையின் பயன் பற்றி ஒரு நாளிதளின்  வெப்சைட்யில் ஒருவர் கொடுத்த கமெண்ட்டில் கீழ் கண்ட பகுதியை படித்தேன் அது உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியதால் அதை இங்கு பகிர்ந்து கொண்டேன் 

கூடங்குளம் அணு உலையில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தமிழ்நாட்டின் மின்சார தேவையை போக்குமா? 

கூடங்குளம் அணு உலையின் மொத்த மின்னுற்பத்தி = 21000=2000mw. அணு உலைகளால் சராசரியாக 60% மின் உற்பத்தியே செய்ய முடியும்=1200mw. எந்த ஒரு மின்னுற்பத்தி நிலையமும் 100% மின் உற்பத்தியை கொடுக்க முடியாது.

இங்கு ஆண்டு மின் உற்பத்தி 60% எனக்கொள்ளப்பட்டுள்ளது.ஆனால் கல்பாக்கம் அணு உலையே கடந்த 4 ஆண்டுகளாக தான் 40-50% மின்னுற்பத்தியை கொடுக்க தொடங்கியுள்ளது.

ஆண்டு மொத்த மின்னுற்பத்தி – அணு உலையை இயக்குவதற்கான ஆண்டு மின்தேவை( அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மொத்த மின்சாரத்தில் 10% மின்சாரம் அணு உலையை இயக்குவதற்கு தேவைப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது )=1200mw.

இந்திய அணு உலைகள் செயல்படுவதற்கு ஆண்டிற்கு 12.5% மின்சாரம் தேவைப்பட்டாலும், இங்கு 10% கணக்கில் எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்கும் பங்கு 50% (1080ல் 50%) 540mw.ஊடகங்களில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு 50% பங்கு மின்சாரம் கிடைக்குமென கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் கடைபிடிக்கப்பட்டு வரும் முறையில் அணு உலை வைத்திருக்கும் மாநிலங்களுக்கு 30% பங்கே கொடுக்கப்படும்.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பிற்கு பின் தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த மின்சாரம்=405mw.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில் ஏற்படும் 25% என கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் தேசிய அளவு இழப்பு 27% ஆகும்.

இறுதி பயன்பாட்டின் போது ஏற்படும் 20% மின் இழப்பையும் கணக்கில் கொண்டால் பயனாளருக்கு கிடைக்கும் மொத்த மின்சாரத்தின் அளவு=305mw.
(பிரயாசு என்ற நிறுவனத்தின் ஆய்வின் படி வீட்டு உபயோகத்தின் போது 20% மின் இழப்பு ஏற்படுகின்றது. இதில் தொழிற்சாலைகளிலும், விவசாய பயன்பாட்டின் போதும் ஏற்படும் மின் இழப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை) 

கூடங்குளம் அணு உலையிலிருந்து தமிழகத்திற்கு கிடைக்கும் வெறும் 305 மெகாவாட் மின்சாரத்திற்காக அணு உலையிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுக்கு மக்கள் ஆளாக வேண்டுமா என்று தமிழ்நாட்டு மக்கள் கண்டிப்பாக யோசிக்க வேண்டும். 

அணு உலை =13000 croress rs. runing cost 5000 crores.safeing 900 tone uranium 50000 years . 


யு ரேனியம் 50000 வருடங்களுக்கு பாதுகாத்து வரலாம் ஆனால் பாதுகாக்கும் போது ஏதேனும் குறைபாட்டினால் அல்லது தனி மனித தவறினால் அல்லது இயற்கை சீற்றத்தால் விபத்து நடந்தால் ஏற்படும் இழப்பு எக்கசக்கம் . 

மாநிலத்திலுள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலமாக கிடைக்கும் சேமிப்பு=500mw and more .இந்தியாவில் உள்ள குண்டுபல்புகளை (Tungsten Blub 60watts) மாற்றுவதன் மூலம் 10,000 மெகாவாட்டிற்கும் அதிகமான மின்சேமிப்பு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை கொண்டு செல்லுதல், வினியோகத்தலில்(T&D Loss) ஏற்படும் 25% இழப்பை 10% ஆக குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=1575 mw.

தமிழ்நாட்டின் மொத்த மின்னுற்பத்தியான 10,500 மெகாவாட்டில் 15% சேமிப்பதன் மூலம் கோடைகாலத்தின் அதியுயர் மின் தேவையை நிறைவு  செய்ய முடியுமென மைய மின்சார வாரிய அறிக்கை கூறுகின்றது.

தமிழ்நாட்டின் பல்வேறு பிரிவுகளில் பயன்பாட்டில் ஏற்படும் இழப்பை குறைப்பதன் மூலம் கிடைக்கும் சேமிப்பு=2,625mw.இதன் மூலம் தமிழ்நாட்டின் மொத்த மின் தேவையில் 25% நிறைவாகின்றது. அதுமட்டுமின்றி சரியாக மதிப்பிட்டால் இதன் மூலம் நமக்கு கிடைக்கும் சேமிப்பு மிகவும் அதிகமாகும்.

காற்றாலை=700mw.தமிழ்நாட்டின் மொத்த 5,500 மெகாவாட் காற்றாலை மின் திறனில் இதுவரை 4,790 மெகாவாட் அளவிற்கு மின்னுற்பத்தி செய்யப்படுகின்றது.(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

உயிர்ம எரிபொருள்= 900 மெகாவாட்.உயிர்ம எரிபொருளில் இருந்தும், சக்கரை ஆலை கழிவுகளிலிருந்தும் 900 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். .(பார்க்க- தமிழ்நாடு மின்சார வாரிய அறிக்கை).

வீடுகளின் கூறைகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகடுகளை பதித்தல்(2கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் தகடுகளை 25 இலட்சம் வீடுகளில் பதியுதல்=5,000 மெகாவாட்.தமிழ்நாட்டில் உறுதியாகவும், பொருளாதார வகையில் நல்ல நிலையில் உள்ள வீடுகளில் 25% கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இவ்வீடுகளில் சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் எடுக்கும் தகட்டை பதியலாம்.

மேலும் கூடங்குளம் அணு மின் நிலையத்தால் கிடைக்கும் பலன்களை அறிந்து கொள்ள கீழே கொடுக்க பட்ட தளத்தில் படிக்கலாம். 

படிக்க இங்கே  கிளிக் செய்யவும் 


வெகு சிலர் தான் அணு உலை திட்டத்தால் நன்மை ஏதும் இல்லை என்று கூறுவார்கள் . இதை ஏற்பதற்கு பலர் தயாராக இருக்க மாட்டார்கள். பட்டால்தான் புத்தி வரும் என்பதற்கு ஏற்ப அனுபவித்து தெரிந்து கொள்வர். "அவசர தேவைக்கு உடனடி மின்சாரம் " என்ற மாயை அவர்களின் கண்களை மறைத்து வைத்து இருக்கிறது அதனால் எவ்வளவோ எடுத்துக்கூறினாலும் புரிந்து கொள்ள மாட்டார்கள் . இப்படி இருந்தால் எப்படி இயற்கை வளங்களை போற்றி பாதுகாக்க முடியும். தவறான எண்ணம் இருக்ககூடாதுதான் எனினும் அணு உலை விபத்து என்று ஒன்று வரவேண்டும். அப்போதுதான் "அணு உலை வேண்டும் " என்று கூக்குரலிடுபவர்களுக்கு அதன் தாக்கம் புரியும்.


மிக அதிக செலவும், அதிக அளவு பிரச்சனையும், மிகக்குறைந்த மின்னுற்பத்தியும் கொண்ட இந்த அணு உலைகள் வந்தால் தமிழ்நாடு பெரு வளர்ச்சி அடையும், இருபத்தி நான்கு மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும், இனி மின் தடையே இல்லை என்பது போன்ற பசப்பு வாதங்களை மத்திய அரசு நம்முன் வைத்து அணு உலை ஒரு பொக்கிசம் என ஏமாற்றிவருகின்றது. நாம் ஏமாறப்போகின்றோமா

Wednesday, February 8, 2012

Rajaவின் ரவுசு (இவன் ரவுசு தாங்க முடியலடா)

கடந்த ஒரு வாரமா ஆபீஸ்ல நிறைய வேலை அதனால ஒரு போஸ்ட் கூட போட முடியல ஆனா இந்த ஒரு வாரதல ஏகப்பட்ட விஷயங்கள் நடந்து இருக்கு அதுல முக்கியமானது நம்ம கேப்டன் ரவுசு தான்.

சபாஷ் கேப்டன்.

நம்ம முதலமைச்சர் ஜெயலலிதா அடாவடி தனம் ஒலகம் அறிஞ்சது அவங்களுக்கு எல்லாம் அடாவடி தனமா பதில் சொல்லணும் அது தான் முறை. என்னை கேட்ட விஜயகாந்த் சட்ட சபைல நடந்து  கிட்டது தப்புனு சொல்ல மாட்டேன் ஏன்னா ஜெயலலிதாவும் சரி அவுங்க எம் எல் எ களும் சரி நடந்து கிட்ட முறை கொஞ்சம் கூட சரி இல்ல அவங்களுக்கு அப்படி தான் பதில் சொல்லணும். சபாஷ் கேப்டன் உங்க கிட்ட நாங்க நிறைய எதிர்பாக்கறோம்.



அடுத்தது ஜெயலலிதா சொல்லராங்க சட்ட சபையில் விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரி இல்லை . இதை தான் சாத்தான் வேடம் ஓதுதுன்னு சொல்லுவாங்க.. இவர் ஜானகி அம்மாள் முதலமைச்சராக இருந்த போது சட்ட சபையில் நடந்து கொண்ட முறை உலக அறிஞ்ச ஒன்று.. சட்ட சபையில் சென்ன ரெட்டி பற்றி இவர் கூறிய புகார் உலகம் அறிஞ்ச காமெடி.. தாமரை கனியை வைத்து இவர் சபையில் கொடுத்த பஞ்சுகள் ஏராளம்.

முதலில் இவர் கற்று கொள்ள வேண்டும் சபையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர் கட்சி புகார்களை காது கொடுத்து கேட்க தைரியம் இல்லாத இவர் , எதிர் கட்சி கூறும் குற்றசாட்டுகளை கேட்டு அதை திருத்தி கொள்ள மனமில்லாத இவர் எப்படி தமிழ்நாட்டை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்வார்? வாய்ப்பே இல்லை. பாவம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும்.

இவர் எப்படி சவால் விடுகிறார் என்று தெரிய வில்லை இடை தேர்தலில்  தனித்து போட்டி இட திராணி இருகிறதா என்று விஜயகாந்தை கேட்கிறார் ஆனால் இவர் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டி இடுவேன் என்று கூற இவருக்கு திராணி இல்லையே ஏன்?

ஒரு இடை தேர்தலுக்கு 26 அமைச்சர்கள் தேவையா? இது எதை காட்டுகிறது என்றல் இவரின் தோல்வி பயத்தை காட்டுகிறது உண்மையில் இவர் நல்லாட்சி தான் செய்கிறார் என்றால் வேட்பாளரை அறிவித்து விட்டு இவர் மற்ற வேலையை பார்க்க வேண்டியது தானே மக்கள் இவர் ஓட்டு போடுவார்களே அப்பறம் எதற்கு இந்த 26 அமைச்சர்கள்.


அப்ப உங்களுக்கே தெரியுது நீங்க தேற மாட்டிங்கனு அப்பறம் ஏன் இந்த வீராப்பு.


தகுதி இல்லாதவர்களை கிடைத்த பதவி பற்றி ஜெயலலிதா சொன்னால் சரியாக தான் இருக்கும் ஏன் என்றால் அவரே ஒரு தகுதி இல்லாத நபர் முதல் அமைச்சர் பதவிக்கு.

தமிழகம் முழுவதும் வரலாறு காணாத மின்வெட்டு... வெறுப்போட உச்சத்தில மக்கள் இருக்காங்க இந்த லட்சணத்தில நீங்க நல்லாட்சி தருவதா வேற சொல்லுறிங்க இதுக்கு எல்லாம் பதில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தெரியும்.

ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கும் பத்திரிகையில் வந்த கமெண்டுகளை பார்த்த தெரியும் ஜெயலலிதா தரும் நல்லாட்சியின் லட்சணம் !!!    

மக்கள் காத்துட்டு இருக்காங்க அடுத்த தேர்தலுக்கு அவங்களால அப்ப தான் பதில் சொல்ல முடியும்













  

Sunday, January 22, 2012

ஒவ்வொரு ப்ரெண்டும் தேவை மச்சான்



வாழ்கையில் எத்தனையோ பேரை தினம் தினம் சந்திக்கிறோம், பழகுகிறோம், சேர்ந்து பொழுதை கழிக்கிறோம், ஏன் அலுவலகத்தில் ஒன்றாக வேலை கூட வேலை பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் நாம் திரும்பி பார்த்தல் நம்முடன் பழகிய அதனை பேரையும் ஞாபகத்துல வச்சிக்க மாட்டோம் ஒரு குறிப்பிட்ட சில பேர் மட்டுமே நாம் நினைவில் இருப்பர். நாம் கஷ்டபடும் போது, சந்தோஷபடும்போது அந்த சிலரை மிஸ் பண்ணுவோம். அப்படி தங்களை  ஒருவற்கு ஒருவர் மிஸ் பண்ணும் மூன்று நண்பர்களை பற்றிய கதை தான் நண்பன்.

ஒரு படத்தை பார்க்கும் போது நம்மை அந்த படத்துல ஒன்றி போய் பார்க்க செய்தால் அதுவே அந்த படத்தின் வெற்றி. அந்த வகையில் நண்பன் படம் என்னை அவனுடன் ஒன்றி போக செய்து என்னை முழுமையாக ஆக்கிரமித்து கொண்டது  

நல்ல வேலை நான் இந்த படத்தின் ஒரிஜினலான 3 IDIOTS பாக்கலை அதனால படத்தை நல்ல என்ஜாய் பண்ணி பார்க்க முடிஞ்சது இல்லனா தேவை இல்லாம ஒரிஜினல் படத்துல நடிசுவங்களோட கம்பர் பண்ணி பார்போம்.

படத்தில் காட்டப்படும் நான்கு மாணவ கதாபாத்திரங்கள் நம்முடைய கல்லுரி காலத்தில் நிறைய பார்த்து இருப்போம் குறிப்பாக அந்த சத்யன் பன்ன ஸ்ரீ  வத்ஷவ் கேரக்டர் இன்று நம்மிடையே நிறைய பேர் உள்ளனர். அந்த கேரக்டர் ஒரு சுயநலவாதி தான் முன்னேறுவதற்காக மற்றவர்களை முன்னேற விடாமல் கெடுத்து தான் முன்னேற நினைக்கும் கேரக்டர் அதே போல் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொள்ளும் பச்சோந்திதனமான கேரக்டர். சத்யன் மிக சிறப்பா செய்து இருக்கிறார் அவருடைய பாடி லாங்குவேஜ் எல்லாம் சிறப்பா இருக்கும் கண்டிப்பா இந்த படம் அவருக்கு ஒரு பெரிய பிரேக் தான் ஆனா இதுக்கு அப்பறம் எப்படி எடுத்து போக போறாரு பொறுத்து  தான் அவருடைய career இருக்கு.  


இன்றைய   நடைமுறை வாழ்கையில் நிறைய பேர் போட்டி போட்டு முன்னேறுவதில்லை ஒன்று நன்றாக ஜால்ரா அடித்து அல்லது மற்றவர்களின் முன்னேறத்திற்கு முட்டுக்கட்டை போட்டு தான் முன்னேறுகின்றனர் இது போன்ற கேரக்டர் தான் சத்யனுடையது இதை படத்தில் சத்யன் examku தயாராகும் முறையை வைத்து புரிய வைத்து இருப்பர் டைரக்டர்.

ஜீவா செய்த சேவற்கொடி செந்தில் கேரக்டர் நம்மில் பல பேரிடம் காணலாம். அது பயம், தைரியமின்மை அந்த கேரக்டரை அற்புதமாக செய்து இருப்பார். படத்தில் அந்த கேரக்டரை பார்க்கும் போது நான் கல்லூரி காலங்களில் ஆங்கிலத்தில் பேசுவதற்கு பயந்தது, தயங்கியது மற்றும் சில விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தது.


கல்லூரி நாட்களில் நீங்கள் பார்த்து இருக்கலாம் வித்தியாசமான, பிரபலமான மாணவன் கூட ஒரு ப்ரெண்டு இருப்பான் அவர்களிடையே ஓர் ஆரோக்கியமான அத்மார்தனமான நட்பு இருக்கும் அது போல் ஓர் நண்பனாக ஸ்ரீ காந்த் செய்து இருப்பர். வெங்கட் என்ற அந்த கேரக்டர் மிக நன்றாக இருந்தது.

விஜய் பண்ணிய பாரி என்ற அந்த கேரக்டர் மிக சிறந்த பாத்திர படைப்பு இந்த மாதிரியான நண்பன் நம் நட்பு வட்டத்தில் உண்டு. அவர்கள் கண்டிப்பாக எந்த சூழ்நிலையிலும் எதிர் மறையாக பேச மாட்டார்கள்  ஆனால் இந்த படத்தில் காட்டியதை போன்று அந்த நண்பர்கள் எல்லா விஷயத்திலும் சிறந்தவராக இருப்பது மிக சிலர்தான். 



படத்தோட மற்றொரு முக்கிய பலம் சத்யராஜ் பண்ணிய அந்த VIRUS கேரக்டர் தான் அவரை பார்க்கும் போது என் கல்லூரி பேரசிரியர் "ஆரோக்கியராஜ்" சார் தான் ஆனா VIRUS மாதிரி இல்ல ஓரளவு கண்டிப்பான ஆசிரியர். இன்று நான் பணிபுரியும் வேலைக்கான தன்னம்பிகை விதையை அவர்தான் விதைத்தார். உண்மையில் சத்யராஜை தவிர அந்த கேரக்டரை வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக தமிழில் செய்ய முடியாது. 

இலியானா இலியானாவின் இடுப்பளவுக்கு தான் நடித்து இருந்தார்.

இந்த படம் என்னை மிக பிடிக்க காரணமே படத்தின் சில சம்பவங்கள் என்னுடைய கல்லூரி மற்றும் அதை சார்ந்த நாட்களுக்கு கொண்டு சென்றது.

உதாரணத்திற்கு இலியானாவின் அறிமுக காட்சி மூன்று நண்பர்களும் திருட்டுதனமா கல்யாண விருந்திற்கு செல்லும் காட்சி. நான் எனது நண்பர்களுடன் வேறு ஊர்க்கு சென்று அறிமுகமில்ல, யாரென்று தெரியாத திருமணத்திற்கு சென்று வயிறு நிறம்ப சாபிட்டோம் நல்ல வேளை யாரும் கண்டுபிடிக்கவில்லை.

நம்முடைய தேவை தான் பல கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையே படத்தில் கல்யாண காட்சியில் கார் பாட்டரி வைத்து inverter உருவாக்குவதை பற்றி கூறி இருப்பார் அந்த ஐடியாவிற்கு மற்றொரு காட்சில் வடிவம் கொடுத்து இறுதியில் அதனை பிரசவ காட்சியில் கொண்டு வண்டு சேர்த்தது கதாசிரியரின் திறமை.

படத்துல பாரட்ட வேண்டிய விஷயம் கேமரா ஒரே வார்த்தைல  சொல்லணுமுன  "Superb".


பாடல்கள் சொல்ல வேண்டியதில்லை ஏற்கனவே ஹிட் அஸ்க்கு அஸ்க்கு, நல்ல நண்பன் தேவை , கண் முன்னே போன்ற பாடல்கள் மனதை வருடும் ரகம். இருக்கான இடுப்பு இருக்கான பாடல் விஜய் ரசிகர்களுக்காக. 


குறையென்று பார்த்தல் எல்லா படத்திலும் குறைகளை பார்க்கலாம் ஆனால் நல்ல படங்களில் அதை பெரிது படுத்த கூடாது அதனால் எனக்கு சொல்ல மனம்  வரவில்லை. 

மனதை நெகிழ செய்த காட்சிகள்
  1. ஸ்ரீ காந்த் தான் தந்தையிடம் பேசும் காட்சி.
  2. ஜீவாவின் interview காட்சி 
  3. ஜீவாவின் தற்கொலை செய்ய முயன்று ஆஸ்பத்திரியில் இருக்கும் காட்சிகள் 
  4. அனுசுயாவின் பிரசவ காட்சியில் சத்யராஜ் நடிப்பு   

பிடித்த பாத்திரயமைப்பு :

விஜயின் கேரக்டர் சிறப்பாக செய்யபட்டிருக்கிறது . ஒரு காட்சியில் நண்பர்கள் விஜயின் காதலை இலியானாவிடம் அவர் காதலை தெரிவித்தால் தங்களை மாற்றி கொள்வதாக சொல்லுவார்கள். கதைப்படி அந்த கேரக்டர் தன் காதலை தெரிவிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்  ஆனால் நண்பர்களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக அவர்  தன் காதலை தெரிவிப்பார் படத்தில் இந்த காட்சி இயல்பாக தான் தெரியும் கதைப்போக்கில் அந்த பத்திரத்தை பற்றி அறியும் போது தான் தன் சூழ்நிலையை  விட தன் நண்பர்கள் தான் முக்கியம் என்று  முடிவெடுக்கும் அந்த பாத்திரத்தின் வலிமையை மற்றும்  நட்புக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உணர முடியும்.

மொத்தத்தில் ஷங்கர் ரசிக்கும்படியான நண்பனை கொடுத்து இருக்கிறார்.